தழுவிவிட்டது
தழுவிவிட்டது.
11 / 09 / 2025
சட்டென்று
எல்லாம் ஸ்தம்பித்தது.
வேகமாய் ஓடிய
எண்ண ஓட்டங்கள்
நின்று போனது.
ஐயோ
இதை விட்டுட்டோமே
அதை முடிக்கவில்லையே
என்ற
எழுபது ஆண்டு
எண்ணக் கோர்வைகள்
வேகமாய் ஓடி
அறுந்து விழுந்தன.
கண்கள் இருண்டன.
செவியில் கேள்வி
குறைந்தன.
சீரான மூச்சு
சீர் குலைந்தன.
நாடி ஒடுங்கின.
உருவங்கள் புகை மூட்டமாகின.
எதோ ஒன்று
உடம்பிலிருந்து பிரிந்து
எங்கோ போனது.
உடலும் சில்லிட்டு
அசையா மரக்கட்டையானது.
அந்த நிமிடம் வரை
இருந்த மரியாதை
உயர்திணை
அஃறிணையாய் மாறிப்போனது.
ஓ...
மரணம் என்னைத்
தழுவிவிட்டது.

