துளி உறிஞ்சும் சூரியன்
மழையும்,வெயிலும்
புணரும் வேளையில்,
சொட்டும் மழையுடன்
உன் ரசனையின் ரசிப்புகள்!
விடுதலையான கூண்டுக்கிளியைப் போல,
விடுதலையான
எனக்கான உன் கவிதைகள்!
தேநீர் அருந்தையில்
உதட்டின் மேலிருக்கும் ஒரு சொட்டு
உன்னை நினைக்க வைக்கும்
பனியை உறிஞ்சும் சூரியனாய்!
மலர் வண்டின்
மகரந்தக் குளியல்
எனைத் தீண்டும்-உன்
நினைப்பாய்!
மென் காற்றிலுதிர்ந்து
தலை நிறைக்கும்
வேப்பம்பூவாய்-என்
மனம் நிறைக்கும்
உன் கவிதைகள்!
காதல் அலைகள்
சுனாமியாய் தாக்கிக்
கொண்டு தான் இருக்கிறது!
அஞ்சிக்கொண்டே
மூழ்க நினைக்கிறோமே
ஓரமாய் நின்று கொண்டு!