என் பாப்பா

என் அன்பு பாப்பா ! ஆசை பாப்பா !
உலகமே உரையுதடி உன் சிரிப்பினிலே என் அழகு பாப்பா !
என் இறைவன் அவர் தொடுத்து எடுத்து கொடுத்த அற்புத
குறிஞ்சி மலரும் நீதானே அடி - என் பாப்பா !
பால்வடியும் உன் முகத்தினிலே அற்புத
பரஞ்ஜோதி ஒளிருதடி - என் பாப்பா !
வண்ணத்து பூச்செல்லாம் உன்னை வட்டமிடுகிரதடி என் பாப்பா !
உன் பளிச்சிடும் பற்கள் புன்னகைக்கும் போதெல்லாம்
அந்த வெண்ணிலவும் வெறிச்சு பார்க்குதடி என் பாப்பா !
மின்மினி பூச்சாக மின்னுதடி உன் கண்கள் என் பாப்பா !
உன்னை கொஞ்சி விளையாடும் போதெல்லாம் - நானும்
குழந்தையாக மாரிவிடுகிரேன்னடி என் பாப்பா !

எழுதியவர் : ர.கீர்த்தனா (12-May-15, 11:56 am)
Tanglish : en PAPPA
பார்வை : 786

மேலே