மணங்கள்
நாசியைத் திறந்து அமர்ந்து கொண்டேன் கொசுக்காய் வலையடித்த ஜன்னலின் அருகில்.எதையோ மோப்பம் பிடிப்பதாய் என் உத்தேசம்.ஒரு மணி நேரம் கடந்து நான் எதிர் பார்த்த "மணம்" வரவில்லை.பக்கத்து வீட்டிலிருந்து "மில்க் மேட்"பாயாசம் மணம் ,பப்புவுக்கு பிறந்த நாளென்று.மாடி வீட்டு மாமி செய்யும் "ஆச்சி"மசாலா சாம்பார்.எதிர் வீட்டு ஸ்டெல்லா அக்கா செய்யும் "ரெடிமேட்" சூப் மணம்.இது எதற்காகவும் இல்லை நான் காத்திருப்பது.பொறுத்து பொறுத்து பார்த்து விட்டேன் இனி நாமே தேடி போய்ட வேண்டியதுதான் .தெருவில் இறங்கி அத்தனை"ரெடி மிக்ஸ்" களின் வாசனைகளையும் கடந்து கொண்டிருந்தேன்.இதோ கிட்ட வந்துட்டேன்.
மாட்டுக்கார முனியப்பன் பால் கறந்து கொண்டிருந்தான்.கொஞ்சம் காத்திருந்தேன்.நுரையும்,வெண்மையுமாய் பால் நிறைத்தது பாத்திரத்தை.எங்கே அந்த சுண்டியிழுக்கும் மணம்?வேறு எது வாசம் வந்தது ரெடி மிக்ஸ் களைப் போல.
"என்ன பாப்பா நிக்குற பால் வாங்க வந்தியா?"என்ற கேள்விக்கு பல்லிளித்து வைத்தேன்.இன்னும் எவ்வளவு தான் பொறுப்பது?கடைசியில் "தொப்,தொப்.."
என்று விழுவதற்கு பதிலாக "சர்,சர்,.."என்று மணக்காமல் விழுந்தது சாணம்.
என்ன அண்ணே மாடு என்ன சாப்டுச்சு வயிறு சரி இல்லையா என்று கேட்டதற்கு "என்ன பாப்பா இப்படி கேட்டுட்ட ரொம்ப வருஷமாவே சாணினா இப்படி தான் இருக்குது"
என் காத்திருப்பு வீணான விரக்தியில் வீடு வந்து சேர்ந்தேன் கலப்பட மணங்களை சுமந்து கொண்டு.
(ரோட்டில் போஸ்டரை தின்னும் மாட்டைக் கண்டது தோன்றியது..)