நான் சிகரெட் பேசுகிறேன்
கருவறையிலிருந்து
பிரித்து எடுத்து
கொல்லி வைக்கப்படும் குழந்தை நான்.
புகைவது நானெனினும்
எரிவது அவனே.
பெற்றோருக்காக
காதலைத் துறந்தவர்களும்
என்னை துறவார்.
சிலருக்கு
காதலை மறக்க
மருந்தாகிறேன்
பலருக்கு
நுரையீரல் கெடுக்கும்
விசமாகிறேன்
இந்த ஜெகனுக்கு
கவியெழுத பொருளாகிறேன்.
என்னை விற்றவரெல்லாம்
பெரும் வியாபாரிகள் ஆனார்கள்
எனைப் பெற்றவர்களெல்லாம்
புற்று நோயாளியாகிறார்கள்.
காதலன் நலனுக்காக
காதலை வெறுக்கும் காதலி போல.
எனை விரும்பி புகைப்பவரை
எரிக்கும் என்நிலை எண்ணி
தினம் கண்ணீர் விடுகிறேன் புகையாக..
எங்களை காதலிப்பவர்களது
வாழ்நாளை ஓர்நாள் கூட்ட
எங்களை இனப்படுகொலை
செய்தாலும் மகிழ்வாய் ஏற்ப்போம்...
புரிந்துகொள் மனிதா எங்கள் மனதை
தோற்றுவி சிகரெட் புகையிலா உலகை...