ஆண்மை வாழ்க

ஆண்கள் வேட்டையாட போக
ஆற்றங்கரை விவசாயம் செய்து
புள்களையும் புலிகளையும் விரட்டி
திணை காத்தனராம்
சங்ககால பெண்கள்

பகைகொண்ட நாட்டோடு
வால்கொண்டு வீரமேந்தி
ஆண்களுக்கு நிகராய்
தாயகம் காத்தனராம்
இடைக்கால பெண்கள்

கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலே
அத்தனை உருப்படிகளையும்
அனுசரித்து அன்புகூட்டி
குடும்பம் காத்தனராம்
நம் பாட்டிமார்கள்

பொருளீட்டுதலில் அப்பாக்கள்
தன்னையே தொலைத்திருக்க
பாசம் தொலையாதிருக்க
குழந்தைகளை காத்தனர்
நம் அம்மாக்கள்

வேலை இடம், வீதி
கல்விக் கூடம், சாலை
காலை பகல் இரவு - என
எங்கும் எப்போதும் எதுவும்
நடக்கலாம் என்பதால்
தங்களையே காத்துக்கொள்ள போராடும்
இக்கால பெண்கள் ......

எழுதியவர் : மேரி டயானா (2-Jun-15, 2:46 pm)
Tanglish : aanmai vazhga
பார்வை : 156

மேலே