தூக்கணாங்குருவிக்கூடு
தூக்கணாங்குருவிக்கூடு
=========================================ருத்ரா
மனிதர்களே
காதலியுங்கள்
இந்த பசும்புல்லை.
அப்போது தான் உங்களை
எரிக்க வரும் தீயை எரிக்க முற்படுவீர்கள்.
மனிதர்களே
காதலியுங்கள்
இந்த ஊமை மருத மரங்களை
அப்போது தான்
உங்களுக்கும் சிறகு முளைக்கும்போது
இதில் கூடு கட்ட இடம் கிடைக்கும்.
மனிதர்களே
காதலியுங்கள்
மனிதர்களை.
அப்போது தான்
மானிட உணர்வு
உங்கள் நரம்புகளில் யாழ் மீட்டும்.
மனிதர்களே
காதலியுங்கள்
இசை எனும் இன்பத்தேனை.
அப்போது தான்
ரோஜாவின் மகரந்தங்கள்
உங்களுக்கு மாணிக்கங்களாய் ஒளிரும்.
மனிதர்களே
காதலியுங்கள்
காதலை.
அப்போது தான்
பகைப் புகை சிகரெட் புகையாய்
உன் மூக்கிலும் வாயிலும்
வந்து வழிந்து கொண்டிருக்காது.
மனிதர்களே
காதலியுங்கள்
அந்த தூக்கணாங்குருவிக்கூட்டை
காற்றில் அது ஆடும் ஆட்டமே
உன் இதயம்.
மனிதனே
காதலி
ஒரு பெண்ணை.
ஆனால் உன் இதயத்தை மட்டும்
அதோ
அந்த தூக்கணாங்குருவிக்கூட்டில்
பத்திரமாக
அடைத்து வைத்து விடு.
============================================