கண்ணன் துதி

விரல் நுனியில் விண்ணுயர் குன்றெடுத்து
உரலுடன் நெடுமரம் ஊடி அசுரனழித்து
பரணேறி கவர்ந்த பாலும் பங்களித்து
பார்தனை அன்னைக்கு பவளவாயில் காட்டி
பரல் கிண்கிணிக்க பாவையருடன் களித்து
மறுமையழி பேறுதனை மடயிடையர்க் களித்த
பரம்பொருளே, பைநாகப் பள்ளிகொள் பரந்தாமா
உருகும் மெழுகாய், ஊழ்வினை பயனாய்
வறியவன் யான் வாடுகிறேன் - அரியே
கரியவனே, கண்ணலர்ந்து காப்பாய் .