மூக்குத்திக்காரி

சுடும் நிலவில்
விரிகிறது
உன் முகம்....
சுடாத தாகம்
நதி ஒன்றைத் தெளிக்கிறதான
இடைவெளி உருட்டும்
கூழாங்கற்களின்
இளஞ்சூட்டில்
ஒருதுளி பனிக்கட்டி
நிலவைப் படைக்கிறது,
வானம் உடைந்த
முப்பொழுதுக் கற்பனைகளில்....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-May-15, 11:01 pm)
பார்வை : 136

மேலே