வியந்து ரசித்த வரிகள் .......................................... வெண்கலச் சிறகிருந்தும் மழைகாலங்களில்...
வியந்து ரசித்த வரிகள்
..........................................
வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !
இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !
‘நான் தமிழன்’ எனும் கவிதையில் ’ லம்பாடி எனும் பாலா’