வெட்கம் தின்றவர்கள்

புலி பதுங்கி இருக்கும்
காடு அவள்...
நுழைவதும்
சிரமம்..
வெளியேறுவதும் சிரமம்...
காடு கொண்ட
வளைவுகளில்
தொலைவது மட்டும்
சுலபம்...
கருந்துளை
கவிழ்ந்து கிடக்கும்
ஒரு பதுங்கலாய்...
நான் வழி தொலையும்
ஒற்றை
யானையின் பிளிறலோடு..
மனதை
வாரிக் கொண்டே
முயங்குகிறேன்...
ஆடைகளற்ற
வானமாய்
ரோமங்களின் சிலிர்ப்போடு
வண்ணம் மாறுகிறது
எங்கள் இரவு....
எங்கள் நிர்வாண
பிரதேசங்களில்
நாங்கள் வெட்கம்
தின்று ஒருவரையொருவர்
கொல்லுகிறோம்....
உறுதி கொண்ட
கண் ஒன்றும்,
உயரம் நின்ற
பண் ஒன்றும்,
இரு நிலாக்களும்,
இன்ன பிற
உலாக்களும்,
பேய் பிடித்து
நகர்கின்றன,
விடியலை நோக்கி...
கவிஜி