முதல் நாள்

உன்னைப் பார்த்த முதல் நாள்
என் விழி அகன்றது

உன்னைக் கேட்ட முதல் நாள்
என் காது குளிர்ந்தது

உன் வழியறிந்த முதல் நாள்
என் வழி மாறியது

உன் நெஞ்சம் யுணர்ந்த முதல் நாள்
என் நெஞ்சம் விரிந்தது

உன் சுவாசம் பட்ட முதல் நாள்
உயிர் மூச்சின் எல்லை புரிந்தது

உன்னை வரைந்த முதல் நாள்
என் தூரிகை கூர்மை பெற்றது

உன் நடையை ரசித்த முதல் நாள்
நாட்டிய இலக்கணத்தின் அர்த்தம் விளங்கியது

உன்னை மருவிய முதல் நாள்
என்னுயிர் உன்னுள் கலந்தது

எழுதியவர் : ரமணி (22-Apr-15, 12:47 pm)
Tanglish : muthal naal
பார்வை : 107

மேலே