அரண்

மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
மரமாகிச் சாயத் துடித்தோம் – சரமாரி
என்றே பொழிந்த எதிராளித் தோட்டா
சினம் கண் டெழுந்தோம் சிவந்து.

உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
தயிராய்க் கடைவோம் துணிந்து.

காட்டு மகமாயி காளி வழிகாட்ட
நாட்டில் நலிந்த தமிழரினி – கூட்டுக்
குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
எயிலாய் இருப்போம் இணைந்து.
(எயில் –அரண்)

படத்துக்கான கவிதை நன்றி வல்லமை
(வல்லமை இணைய இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில் வெற்றி பெற்றக் கவிதை )

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Apr-15, 1:52 am)
பார்வை : 143

மேலே