நினைவுகள்
கணுக்கால் புதைகிறது
சுடு மண்ணில்..!
முங்கிக் குளித்தது
மனக் கண்ணில்..
ஆற்றுநீரின் சப்தம்
காதில் நிறைந்தது ஒருகாலம்.!
மணல் லாரிகளின் சப்தம்
இப்போது அலங்கோலம்..!
பசித்தவன் வயிற்றுக்கு
அமிர்தமாய் இருந்தது ஆறு...
இந்த ஆற்றை திருடி
புசித்தது இப்போ யாரு..?