இப்படியாக நாம் -யாழ்மொழி

கவிதை
கண்களில் தொடங்கி
காதலில் என்பாய்..

உலகம்
என்னில் தொடங்கி
உன்னில் என்பாய் ...

பரிசு
தலைமயிர் முதல்
தரிசான தாழ்வரை
வர்ணித்துக் கவி கொடுப்பாய்...

காற்புள்ளி அரைப்புள்ளிகளும்
வாசித்துப் பூரித்தாலும்
மேற்குறித் தவறியதாய்
பொய்யாக பிழை சுட்டுவேன்...

நீயோ
மேற்கொண்டு இருவரியேனும்
வர்ணித்திட வேண்டுமென
வார்த்தைகளோடு வம்பிழுப்பாய் ...

நீ என்னை
எழுதிட வேண்டும் எனக்கு
நான் உன்னை
வாசித்திட வேண்டும் உனக்கு..

எழுதியவர் : யாழ்மொழி (30-Mar-15, 1:58 pm)
பார்வை : 345

மேலே