நிஜம்
விடியல் காணாத
என் உலகில்
அஸ்தமனங்க நிரந்தரம்...
ஆடைகளின்
அத்தியாவசியம் அறிந்ததுதான்
என்
அன்றாட நிர்வாணம்...
என்
அட்சயக்குடங்கள்
அமுதம்தர மறுத்ததில்லை
இங்கு;
புறமெய்திட நேர்ந்தாலும்
பிழையில்லை...
ஆண்மை தூரிகையால்
என் பெண்மைக்குள்
புனையப்பட்ட ஓவியங்களில்
இதுகாறும் எவரும்
"வர்ணங்கள்" பிரயோகிக்கவில்லை...
என்
சாதி கூறும் அந்தரங்கத்தில்
சுகங்களன்றி சூளுரைகள்
தொடுக்கப்பட்டதில்லை...
என்னை தாசி என்பது
இவர்களின் வழக்கம்
உண்மையில் சமத்துவம்
என்னில் மட்டுமே அடக்கம்....