நானொரு தேவதை ராட்சசி-யாழ்மொழி

தேவதை ராட்சசி
=================
காய்ந்தப் புல்லைக்கூட
கண்டு இரசிக்கும் நானொரு
இயற்கை பிரியை ,இதத்தை
விரும்பிடும் இனிய தேவதை ..

அன்றுகொல் இன்றுகொல் என்றுகொல்
எண்ணாது இன்றேகொல் என்று முழங்கும்
நானொரு தேவதை ராட்சசி ...

அந்தப் பெண்ணின் நெஞ்சை சித்தரிக்கும்
எந்த கயவனானாலும் தயங்காமல் -தீ
பந்தமேந்தி கொளுத்தும் கொற்றவை
நானொரு தேவதை ராட்சசி ..

என்னினத்தை இழிவுபடுத்தும் ஏழரை
சனியன்களின் ஜென்மச்சனி நானே
கணிப்பேன் அவர்களின் ஆயுளை

அசுரன், தாருகனின் மார்பை பிளந்த
துர்காதேவிப்போல் கோரை பற்களைக்
கொண்டு கோர தாண்டவமிட்டு
காம கொடூரன்களின் குருதியை உறுஞ்சும்
நானொரு தேவதை ராட்சசி ..

ஆடையை அலங்காரம் செய்துவிற்கும்
ஆடவனின் கண் அங்குமிங்கும் அலைந்தால்
அதைக்கண்டு கண்ணைப்பறிக்கும் காளி
நானொரு தேவதை ராட்சசி ..

எழுதியவர் : யாழ்மொழி (21-Mar-15, 4:22 pm)
பார்வை : 417

மேலே