அலுவலகம்-சகி

----அலுவலகம் -----

அலுவலக பணியில்
மனதில் எத்தனை எத்தனை
காயங்கள் ...

மேல் அதிகாரியின்
அதிகார பேச்சும்
ஆணவ நடைத்தையும் ...

சுதந்திரம் பறிபோய்விடுகிறது ....

பெற்றவர்களிடம் சொல்ல
மனமில்லை ....

மனதை காயபடுத்தும்
வார்த்தைகளும் செயல்களும்
பட்டம் பெற்றதையே வெறுக்க
வைத்து விடுகிறது ....

யாரிடம் சொல்ல ....
சொன்னால் தான்
புரிந்துகொள்ளும் உறவுகள் யார் ?

மதிய உணவும் கூட
உண்ண சில நேரங்களில்
மனம் வருவதில்லை ....

இதுதான் விதியோ ?
இல்லை நேரமோ ?

என்னவென்று சொல்ல ....

ஊதியம் பெறுபவர்களுக்கும்
மனமுண்டு என்பதை அறிந்த
அதிகாரிகள் உண்டோ ?

இப்படி வார்த்தைகளில்
சொல்லி மனதை ஆறுதல்
படுத்த மட்டுமே முடிகிறது....

சகிப்பு தன்மையும் ,பொறுமையும்
வேண்டும் என்பது புரிகிறது ...

உடல் வலிகளை விட
மன வலிகள் அதிகமே ....

மனமில்லா மனிதர்களே
அதிகம் உண்டு இப்புவியில்....

அதில் இவர்களும்
ஒரு வகை போல ....

எழுதியவர் : சகி (21-Mar-15, 3:40 pm)
பார்வை : 470

மேலே