கே-எஸ்-கலைஞானகுமார் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கே-எஸ்-கலைஞானகுமார்
இடம்:  இலங்கை (கொஸ்லந்தை)
பிறந்த தேதி :  04-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jul-2012
பார்த்தவர்கள்:  13513
புள்ளி:  6621

என்னைப் பற்றி...

இலக்கிய உலகில் தவழும் குழந்தை !
================================
சாதிமதம் சிரமேற்றி
சாதிக்க மாட்டேன் - துவேட
சத்தமிட்டு உரமேற்றும்
சாத்தானாக மாட்டேன் !

அறியாமை தலைசூடி
ஆட்டம்போட மாட்டேன் - சிறு
அகங்காரம் மனம்சூடி
அலைபாய மாட்டேன் !

உறவுக்காக உணர்வழித்து
உளறிநிற்க மாட்டேன் - வெறும்
உணவுக்காக பாட்டெழுதி
உயிர்சுமக்க மாட்டேன் !

வாய்முழுக்க பொய்நிறைத்து
வாழ்த்துரைக்க மாட்டேன் -தினம்
வாடும்பயிர் சோகம்பாடி
வாகைச்சூட மாட்டேன் !

காசுபரிசு மோகம்கொண்டு
காலில்விழ மாட்டேன்-வெறும்
காதல்மட்டும் பாடிவிட்டு
காடுபோக மாட்டேன் !

தீமைக்கொண்டு சாற்றினாலும்
தீர்ந்துப்போக மாட்டேன் - சினத்
தீயெடுத்து கொளுத்தினாலும்
தீய்ந்துப்போக மாட்டேன் !

வெறுஞ்சினத்தில் வெகுண்டெழுந்து
வேகம்காட்ட மாட்டேன் - தலை
வெட்டிமுண்டம் ஆக்கினாலும்
வெற்றிதுறக்க மாட்டேன் !

சோகம்எனை வாட்டினாலும்
சொல்லியழ மாட்டேன் - பெரும்
சோதனைகள் தூற்றினாலும்
சொல்லில்விழ மாட்டேன் !
----------------------------------------------------------------உள்ளெரியும் தீ !

என் படைப்புகள்
கே-எஸ்-கலைஞானகுமார் செய்திகள்

படர்கின்ற தமிழ்க்கொடியில் மலர்கின்ற கவிப்பூக்கள் - பல
இடர்நீக்கும் மருந்தாக தினமிங்கு வரவேண்டும் !
தொடர்கின்ற துயரங்கள் துவம்சிக்கும் திறத்தோடு – பெரும்
கடலொத்த தமிழோடு தினந்தோறும் கவிப்பாடு !

திருமுனிவர் குறள்பற்றி திகட்டாத தமிழ்ப்போற்றி – இப்
பெருவெளியில் உழல்கின்ற பிறமொழிகள் பின்தள்ளி
உருவாக்கு உன்னாக்கம் உலகோர்க்குப் புத்தூக்கம் – தரும்
எருவாக்கு, கருவாக்கு இணையற்றத் தமிழோடு !

வீறுதமிழ் பாவலனாம் பாரதியின் வீரமேற்றிப் – பெரு
ஊறுதரும் யாவரையும் “தீ”மொழியால் சுட்டெரிக்க
ஈறுஎல்லை இல்லாத வீரத்தமிழ் பாட்டெழுதி – அரும்
பேறுபுகழ் நிலைத்தோங்கப் பாட்டோடு பாடுபடு !

விழிக

மேலும்

சந்தத்தின் துணையோடு சங்கீதம் கற்றுக் கொண்டேன் இந்த கவிதையில்... ஒரு பாடு பொருளின் அனைத்து தன்மையும் பொருந்தி நிற்கிறது கவியில்... மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 11:27 pm
மிக அழகான.. படிக்க இனிமையான.. நேர்த்தியான படைப்பு.. வாழ்த்துக்கள் 26-Aug-2015 12:45 pm
அப்பாவின் தமிழோடும் அயராத உழைப்போடும் தப்பாமல் உறவாடித் தனித்தமிழின் எழிலோடும் முப்பாலின் புகழோடும் மூத்த்வர்கள் துணையோடும் அப்பாலுக் கப்பாலும் அடைவாள்,இவள் புகழ்மாதே! --------நல்ல தமிழூட்டி வளர்கின்ற கலையிது-- வாழ்த்துகிறேன்! 26-Aug-2015 11:39 am
தமிழோடு விளையாட துளசிக்குப் பயிற்சி தனையூட்டும் கவியூற்று தாய்மொழியின் புரட்சி அமிர்தத்தை கலந்தூட்டும் அன்னையின் முயற்சி அதைகாட்டும் கலைஞான சுடருக்கென் வாழ்த்து. 26-Aug-2015 10:06 am
கே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2020 6:17 pm

பொழிவுறு மாமழை
நலிவுறும் நிலைவரும்
உன் விழிப் பார்வைகள் மலைத்தேன் !
ஒளிர்ந்திடும் சூரியன்
ஒளிந்திடும் குகையென
உன்விழி மூட நான் மலைத்தேன் !

மென்னிதழ் பூவினும்
மென்னிதழ் உன்னிதழ்
மின்னிடும் மின்னலாய் இச்சொல் !
உன் இடம் என் இடம்
ஓரிடம் ஆனபின்
உன்னிடம் பிறப்பது எது(ச்)சொல் ?

கூடுதல் ஊடலே
கூடியே ஆடினும்
கூதலின் கூர்மைக்கு தீ நீ !
ஊடுதல் ஆயினும்
ஊடுதல் காதலென்
உணர்ச்சிக்கு உயிரூட்டும் தீனி !

மென்காலைப் பொழுது
உன் காலைப் பிடித்து
மெய்யன்பை யான்சொல்ல வேண்டும் !
பொய்யான மெய்யுக்குள்
மெய்யான மெய்யொன்றை
மெய்யாலும் யாம்செய்ய வேண்டும் !

பிறப்பில் நீ தேவதை
சுரப

மேலும்

கே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2020 6:00 pm

மெல்ல மெல்ல
எழுந்துக் கொள்ள முயன்றது
அது....

சட்டென யாரோ
தள்ளிவிட்டதைப் போலவொரு
நிகழ்ச்சி...
மீண்டும்
நலிந்து விழுந்தது தரையில்...!

வெடித்த நிலத்தின்
பள்ளங்களுக்குள் இருந்து
ஏதோ அழைப்பதாய்
உணர்த்திக் கொண்டிருந்தது
ஒரு வறண்ட அசரீரி....

புழுதியை
துரத்திக் கொண்டு
ஓடி வரும்
மாமிச வாடையை
விலக்கிவிட முடியாது
உறிஞ்சிக் கொண்டிருந்தது
காற்று....!

மாறுவேடம் பூண்ட நெருப்பு
முலைப்பாலாய் தீயூட்ட
மெதுமெதுவாய்
சப்பிக்கொண்டிருந்தது
ஆற்றின் அடையாளங்கள்...

இனி எழ
வாய்ப்பின்றிப் போன
அது
உறுதியாய் விழ
தாங்கிப் பிடித்தது அந்த
கட்டாந்தரை...!

எந்த ஆர்ப்பாட்டமும்
அலட்டலும் இல்லாது
அந்த உயி

மேலும்

கே-எஸ்-கலைஞானகுமார் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 9:07 am

எந்த புலியாவது
பிச்சை எடுத்து
கண்டதுண்டா நீங்கள்....?
யானைகளைக் கண்டிருப்பீர்கள் !

ஒட்டிய வயிறோடு...
பட்டினி கிடக்கும் ஓநாய்
கண்டிருக்க மாட்டீர்கள்
ஆனால் நாய்கள் !?

தூசனம் பேசுமா
தூக்கணாங்குருவிகள்?
கிளிகளைப் பாருங்கள்...
ஜோசியம் சொல்கின்றன !

கோவிலுக்கு நேந்துவிட்ட
கரடியினம் எங்குமில்லை....
கொம்பு வைத்திருந்தாலும்
கடாக்கள் அடிமையே !

சிறுத்தை மடி சுரந்த பாலை
சிங்கங்கள் திருடுவதில்லை....
கன்றுகளின்
கால்வயிறு நிரம்புவதும்
மாடுகளின் பெருங்கனவே !

வித்தைக் காட்டும்
வேங்கைகள் எங்குமில்லை
சீத்தைக் கட்டிய
குரங்குகள் நிறையவுண்டு...!

களவாடி தின்றால் தான்

மேலும்

அட ஆமாப்பா..... 26-Jan-2018 9:47 pm
சகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம் 26-Jan-2018 9:46 pm
எங்கப்பா யாரையுமே காணோம்....சௌக்கியமா....? 26-Jan-2018 9:44 pm
நன்று 24-Oct-2017 10:37 pm

எந்த புலியாவது
பிச்சை எடுத்து
கண்டதுண்டா நீங்கள்....?
யானைகளைக் கண்டிருப்பீர்கள் !

ஒட்டிய வயிறோடு...
பட்டினி கிடக்கும் ஓநாய்
கண்டிருக்க மாட்டீர்கள்
ஆனால் நாய்கள் !?

தூசனம் பேசுமா
தூக்கணாங்குருவிகள்?
கிளிகளைப் பாருங்கள்...
ஜோசியம் சொல்கின்றன !

கோவிலுக்கு நேந்துவிட்ட
கரடியினம் எங்குமில்லை....
கொம்பு வைத்திருந்தாலும்
கடாக்கள் அடிமையே !

சிறுத்தை மடி சுரந்த பாலை
சிங்கங்கள் திருடுவதில்லை....
கன்றுகளின்
கால்வயிறு நிரம்புவதும்
மாடுகளின் பெருங்கனவே !

வித்தைக் காட்டும்
வேங்கைகள் எங்குமில்லை
சீத்தைக் கட்டிய
குரங்குகள் நிறையவுண்டு...!

களவாடி தின்றால் தான்

மேலும்

அட ஆமாப்பா..... 26-Jan-2018 9:47 pm
சகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம் 26-Jan-2018 9:46 pm
எங்கப்பா யாரையுமே காணோம்....சௌக்கியமா....? 26-Jan-2018 9:44 pm
நன்று 24-Oct-2017 10:37 pm
கே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 9:07 am

எந்த புலியாவது
பிச்சை எடுத்து
கண்டதுண்டா நீங்கள்....?
யானைகளைக் கண்டிருப்பீர்கள் !

ஒட்டிய வயிறோடு...
பட்டினி கிடக்கும் ஓநாய்
கண்டிருக்க மாட்டீர்கள்
ஆனால் நாய்கள் !?

தூசனம் பேசுமா
தூக்கணாங்குருவிகள்?
கிளிகளைப் பாருங்கள்...
ஜோசியம் சொல்கின்றன !

கோவிலுக்கு நேந்துவிட்ட
கரடியினம் எங்குமில்லை....
கொம்பு வைத்திருந்தாலும்
கடாக்கள் அடிமையே !

சிறுத்தை மடி சுரந்த பாலை
சிங்கங்கள் திருடுவதில்லை....
கன்றுகளின்
கால்வயிறு நிரம்புவதும்
மாடுகளின் பெருங்கனவே !

வித்தைக் காட்டும்
வேங்கைகள் எங்குமில்லை
சீத்தைக் கட்டிய
குரங்குகள் நிறையவுண்டு...!

களவாடி தின்றால் தான்

மேலும்

அட ஆமாப்பா..... 26-Jan-2018 9:47 pm
சகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம் 26-Jan-2018 9:46 pm
எங்கப்பா யாரையுமே காணோம்....சௌக்கியமா....? 26-Jan-2018 9:44 pm
நன்று 24-Oct-2017 10:37 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) SIVAPPRAKASAM மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2016 9:11 pm

கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!

கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!

சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !

நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !

ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!

நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரே

மேலும்

நன்றி தோழரே 10-Nov-2016 8:34 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
Awesome 10-Nov-2016 2:18 pm

கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!

கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!

சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !

நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !

ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!

நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரே

மேலும்

நன்றி தோழரே 10-Nov-2016 8:34 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
Awesome 10-Nov-2016 2:18 pm
கே-எஸ்-கலைஞானகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2016 9:11 pm

கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!

கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!

சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !

நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !

ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!

நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரே

மேலும்

நன்றி தோழரே 10-Nov-2016 8:34 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
நன்றி தோழரே 10-Nov-2016 8:33 pm
Awesome 10-Nov-2016 2:18 pm

ஒரு பக்கம் மாமரம்
ஒரு பக்கம் கொய்யா மரம்
மதில்மேல் பூனையும் அணிலும்...!
=
நெருக்கமாய் இருவர்
வீடு முழுவதும் புற்றீசல்
விளக்கணைத்துக் கொண்டார்கள்....!
=
செங்குத்தான சுவர்
தடங்கலின்றி ஏறிச் செல்லும்
எறும்புக் கூட்டம் !
=
சேற்றுநீர் குழி
ஆனந்தமாய் நீராடும்
காகங்கள்....!
=
காத்திருந்து காத்திருந்து
உறுமீன் பிடித்தது மீன்கொத்தி
கழுகுக்கு மீனும் மீன்கொத்தியும் !

மேலும்

வாங்க வாங்க.. நலம் தா னே..! 18-Aug-2016 4:25 pm
ஒவ்வொரு துளிகளும் சிறப்பு... வாழ்த்துக்கள் ... 18-Aug-2016 9:07 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 22 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-May-2015 4:33 am

அவித்த முட்டையில்
அங்கங்கே சிறு வெடிப்பு
கருக்கலைப்பு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சட்டத்தில் ஓட்டைகள்
சகஜம்தானே
புல்லாங்குழல்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யார் நனைந்தாலும்
நனையாமல் இருக்கிறது
மழை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நெற்றிக் கண் திறப்பினும்
குற்றமில்லை
தேங்காய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழகு குறிப்பில்
ஆபத்து பின்குறிப்பு
ரோஜாமுள்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விலைவாசி ''ஏறுவதை''
விளையாட்டாய் நினைக்குமா?
ஏணி...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து ரூபாய் காணிக்கையில்
பத்திரமாய் இருக்கிறது
கடவுளின் நம்பிக்கை...
~

மேலும்

மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... தங்களின் புரிதல் கருத்திலும் எடுத்துக் காட்டிலும் மிக்க மகிழ்ந்தேன்... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:32 pm
காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) T. Joseph Julius மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-May-2015 1:24 pm

அம்மாவை நினைத்து..
அறுசீர் விருத்தம் - நான்கு காய்ச்சீர்கல், இரண்டு மாச் சீர்கல் கொண்டதுவாக --

பிறப்பித்தாய் பல்லிடர்கள் உனுட்தாங்கிப் புதுப்பிறவி பெற்று வந்தாய்!
சிறப்பித்தாய் பலர்முன்னும் சீரியபல் லிதமான சொல்லி வைத்தாய்!
நிரப்பித்தாய் உன்னுளென் நினைவுகளை பூரித்தே நின்று பார்ப்பாய்!
ஒருப்பித்தாய் என்,நினைவு களிலன்றோ தினமும்,நீ உலவி வந்தாய்!
நெருப்பில்தான் வைத்துன்னைக் கடன்,தீர்த்த தாய்ச்சொல்லி நிற்கின் றேனே!

அறுசீர் விருத்தம் - ,விளச்சீரில் தொடங்கி விளமும், மாவும் கலந்து வருவதாக...

அழகிய நிலவைக் காட்டி,
***ஆரதில் உள்ளார் என்ற
பழங்கதை படித்துப் பேசிப்
***பாலுடன் கலந்து நன்கு

மேலும்

ஐயா வணக்கம், இவை முகனூலில் வந்தபோது 'பிடித்து' இருந்ததை சொல்லி விட்டேன். இப்போது ஆற அமர அமர்ந்து அதன் இலக்கணத்தை படித்து வருகின்றேன். அன்பின் இலக்கணத்திற்கு கவிதை இலக்கியக் காணிக்கை இது. சவலையர் நாமெல் லோரையும் ***சாமிகை விட்ட போதும் அவலமே தாங்கத் தந்த ***அருட்கொடை தாயே அன்றோ மிகச் சிறப்பு, தொடருங்கள். 12-Jun-2015 12:18 pm
இணையக் கோளாறு .. என் இதயக் கோளாறு அல்ல அது .. 10-Jun-2015 8:47 pm
ஐயோ... நான் அப்படி கூற வர வில்லை ஐயா... நான் நீண்ட நாட்களாய் தளத்தின் பக்கம் வர இயல வில்லை. வேலை பளு காரணமாக வர முடியாமல் போய் விட்டது அப்படியே வந்தாலும் அலைபேசியில் ஒன்றிரண்டு படைப்புகளை வாசிக்க கூட நேரம் போத வில்லை.. அதான் அப்படி கூறினேன்... உங்கள் பிள்ளையிடம் இப்படி கேள்வி கேட்டால் பயந்து விட மாட்டேனா? 07-Jun-2015 11:45 pm
நன்றி கலை! 07-Jun-2015 7:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (144)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (144)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (145)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே