Ra Gavi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ra Gavi
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Sep-2012
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  62

என் படைப்புகள்
Ra Gavi செய்திகள்
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) திருமதி கலைஞானகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jul-2014 10:34 am

விடியலைத் தேடி விரல்நுனி தேய
கவிதைகள் செய்கின்றோம் – சிறு
செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில்
செழிப்பைத் தேடுகிறோம் !

எழுபதைக் கடந்தும் ஏரினை இழுத்தவர்
எலிக்கறி தின்கின்றார் – நாம்
உழுவதை மறந்து உழுபடை துறந்து
எழுத்துகள் செய்கின்றோம் !

ரவைகள் துளைத்து ரத்தம் வடித்த
ரணகளம் காயவில்லை – பெரும்
அவைகள் அதிரும் சூளுரை மட்டும்
இன்னும் ஓயவில்லை !

பற்பல சாதிகள் பாரினில் வளர்த்து
பங்கம் செய்கின்றோம் ! – பின்
பொற்கிழி வாங்கிட சாதிகள் எதிர்த்து
சங்கம் செய்கின்றோம் !

ஊரினில் ஒருவன் ஊழல் செய்தால்
ஊமையாய்ப் போகின்றோம் – பின்
வீரியம் தெறிக்கும் வார்தைகள் சொருகி
வேதம் ஓத

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே ! தங்களின் வரவிலும் கருத்திலும் இவனுக்கும் ஆனந்தமே ! 26-Jul-2014 9:30 pm
கலை ! நல்ல கவிதை படிக்க கிடைத்தால் என்னுள் இருக்கும் ஒரு நல்லவன் வெளியே வருவான். உங்கள் கவிதை மூலம் இப்போதும் வந்தான் . வாழ்த்துகிறான் ஆனந்தமாக . 26-Jul-2014 2:30 am
மிக்க நன்றி தோழி கருத்திற்கு ! 25-Jul-2014 9:23 pm
சிறு செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில் செழிப்பைத் தேடுகிறோம் ! ................... தலை வணங்குகிறேன் உங்கள் கவிதைக்கு ! திசை எட்டும் சென்று சேரட்டும் உங்கள் கருத்து ! வார்த்தை திக்கு நிற்கின்றன வரிவடிவம் ஏதும் பெறாமலே ! சிறப்பு தோழமையே ! 25-Jul-2014 6:02 pm
Ra Gavi அளித்த படைப்பில் (public) vaalmicky மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2012 11:27 pm

ஆடம்பரமில்லாத அமர்க்களமான ஓர்
வாழ்வு வேண்டும்.

உள்ளமதிலே இளமை என்றும்
இடைஞ்சல் இல்லாமல்
வஞ்சமின்றி வேண்டும்.

வறுமையற்ற ஆரோக்கியம் ஆயுள்வரை
குறைவற்ற செல்வமாய் வேண்டும்.

பகுத்தறிவால் கயவர்களையும் கண்ணியவான்களையும்
உய்த்தறியும் சக்தி வேண்டும்.

கயவர்களை காறி உமிழும்
துணிந்த நல் மனம் வேண்டும்.

கண்ணியவான்களுக்காய் சிரம் நோக்கி
குவியும் இரு கரங்கள் வேண்டும்.

நியாயத்திற்காய் மட்டும் பணியும்
சிரம் வேண்டும்.

ஜாதி மதங்களை சுட்டெரிக்கும்
ஓராயிரம் மனித சூரியன்கள் வேண்டும்.

எண்ணங்களாலும், நடத்தைகளாலும்
உயர்குலமென்றும், இழிகுலமென்றும்
ஜாதி பிரிவு வேண்டும்.

மேலும்

Thangal rasanaikku nantri nanba. 07-Jul-2014 5:50 pm
Nanru nanba 07-Jul-2014 5:49 pm
நன்று ராகவி பாரதி பட்டு நினவுக்கு வருகின்றது வேண்டும் வேண்டும் ...... 30-Mar-2014 1:23 pm
கண்ணியவான்களுக்காய் சிரம் நோக்கி குவியும் இரு கரங்கள் வேண்டும். கண்ணியவான்களுக்கு மட்டுமே நம் கரம் குவிய வேண்டும் ! கருத்து ...... கவியில் இருந்து பிறந்த வைரம் ! 30-Mar-2014 12:49 pm
Ra Gavi அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Nov-2012 12:41 am

நீங்கள்
இடைஞ்சல் பட கூடாது என்று
நிசப்தமாய்தானே மலர்கின்றோம்

உங்கள்
எண்ணங்கள் மகிழ்ந்திடத்தானே
வண்ணங்களாக சமைகின்றோம்.

நாங்கள்
மொட்டவிழ்கின்றோம் வாழ்ந்திடத்தானே
அளவாய் பறித்திடுங்கள் அன்பாய் கேட்கின்றோம்.

கூந்தலில் சூடி மகிழும்போதே எங்கள்
இன கூந்தல் கிளைகளிலே கொஞ்சம்
இருக்க வைத்து இன்புறுங்களேன்
இன்முகமாய் கேட்கின்றோம்.

எங்களை பறிக்கும் போது ..........
உங்களுக்கு
பூ வாசம் - அது
எங்கள் இன பாஷையின்
பிரிவால் வரும்
கண்ணீர் வாசம் !

தங்கள் கரங்கள் தீண்டியதால்.....

வண்டுகள் கூட .......
எங்களை தீண்டுவதில்லை நாங்கள்
கற்பிழந்து விட்டோம் என்று.

தென்றலும்

மேலும்

Nantri nanba. 07-Jul-2014 5:37 pm
அஹா அபூர்வம் . அறிவு தளிர் பூ செடியில் தான் சிறப்பு முடியில் அல்ல என்பதை எவ்வளவு அருமையாக வரைந்து விட்டீர்கள் நன்றி நட்புடன் ! 30-Mar-2014 12:37 pm
நன்றி தோழா. 19-Dec-2012 10:51 pm
மிக அருமை தோழி ! 11-Dec-2012 11:54 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-May-2014 8:56 pm

தமிழன்...
நியாயப் பிச்சைக்கு
அநியாயத்திடம்
கையேந்தும் - இளிச்ச
வாயனாகிப் போக,
வெளிச்ச வெளிச்சமாய்
ஒவ்வொரு விடியலும் வருகிறது
இருளைச் சுமந்த படி...

ஊதிப் பெருத்த பேரினவாத
முதுகின் மேல் ...
உரிமைகள் பிடுங்கி,
உயிர்களை விழுங்கிய
ஊனங்களின் நரியாசனங்கள்
உறுதியாய்க் கிடக்கிறது !

வெடிப்பட்டு
இன்னலுற்று வெந்துத் தீய்ந்த
இனமிங்கு சர்வநாசம் !
இடி மின்னல் மட்டும் தந்து
இருண்டுப் போகும்
வானமாக சர்வதேசம் !

மண்ணைப் பறித்து
மக்களைத் தின்றவன்
மண் தின்று
மண்ணாய்ப் போகும் நாள்...

ஒவ்வொரு நொடியும்
சுபிட்சமாய் முடியும் !
ஒவ்வொரு இரவும்
வெளிச்சமாய் விடியும் !

மேலும்

எத்திசையில் விடியல் ? 22-Jul-2014 7:19 pm
மிக்க நன்றிடா பங்கு 22-Jul-2014 7:18 pm
மிக்க நன்றி ஐஸ்சு ! 22-Jul-2014 7:18 pm
மிக்க நன்றி தோழா ! 22-Jul-2014 7:17 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) கே-எஸ்-கலைஞானகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-May-2014 8:56 pm

தமிழன்...
நியாயப் பிச்சைக்கு
அநியாயத்திடம்
கையேந்தும் - இளிச்ச
வாயனாகிப் போக,
வெளிச்ச வெளிச்சமாய்
ஒவ்வொரு விடியலும் வருகிறது
இருளைச் சுமந்த படி...

ஊதிப் பெருத்த பேரினவாத
முதுகின் மேல் ...
உரிமைகள் பிடுங்கி,
உயிர்களை விழுங்கிய
ஊனங்களின் நரியாசனங்கள்
உறுதியாய்க் கிடக்கிறது !

வெடிப்பட்டு
இன்னலுற்று வெந்துத் தீய்ந்த
இனமிங்கு சர்வநாசம் !
இடி மின்னல் மட்டும் தந்து
இருண்டுப் போகும்
வானமாக சர்வதேசம் !

மண்ணைப் பறித்து
மக்களைத் தின்றவன்
மண் தின்று
மண்ணாய்ப் போகும் நாள்...

ஒவ்வொரு நொடியும்
சுபிட்சமாய் முடியும் !
ஒவ்வொரு இரவும்
வெளிச்சமாய் விடியும் !

மேலும்

எத்திசையில் விடியல் ? 22-Jul-2014 7:19 pm
மிக்க நன்றிடா பங்கு 22-Jul-2014 7:18 pm
மிக்க நன்றி ஐஸ்சு ! 22-Jul-2014 7:18 pm
மிக்க நன்றி தோழா ! 22-Jul-2014 7:17 pm
Ra Gavi - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 8:20 am

குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
=====
வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !
=====
தேக்கு மரக்காடு
அலகொடிந்துக் கீச்சிடும்
மரங்கொத்தி !
=====
வாய் திறந்தால்
பொய்யே பேசுகிறது
சோதிடக் கிளி !
=====
காய்ந்த மரம்
இலைகளின் சலசலப்பின்றி
பறவைக் கூடு !

மேலும்

இது குறும்பு தான்! 19-Jul-2014 8:41 am
பழுப்பது பழத்தின் சுதந்திரம் கொத்துவது குருவியின் சுதந்திரம் புழுப்பது புழுக்களின் சுதந்திரம் வற்றிய குளமெனினும் – என்றிருந்தால் சொல்லவந்தது முழுமையாகியிருக்குமோ? சோதிடக்கிளிக்கு அது பழக்க தோஷம்! காய்ந்த மரத்தில் இலைகளின் சலசலப்பு மட்டுமல்ல பறவைகளின் கலகலப்பும் இருக்காதே! உன்னை மாதிரி ஹைக்கூ எழுத முடியாது கலை! மாதிரிக்குப் பார்க்க எனது கவிதை 203827 இப்பொழுதெல்லாம் உன் காட்டில் பொழிகிறது அமைதி ! 19-Jul-2014 8:40 am
துளிப்பா = காய்ப்பா , புளிப்பா ,இனிப்பா பாரப்பா ,இது பா ..அரும்பா ,குறும்பா , அதை நான் சொல்ல விளைந்தால் இருவருக்கும் வம்பா !வெம்பா !படைப்பா அன்பாய் சிரிப்பாய் 01-Jun-2014 6:21 pm
நிசப்தமான தோப்பு ! கவி அருமை ! 01-Jun-2014 6:13 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) kanagarathinam மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-May-2014 8:20 am

குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
=====
வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !
=====
தேக்கு மரக்காடு
அலகொடிந்துக் கீச்சிடும்
மரங்கொத்தி !
=====
வாய் திறந்தால்
பொய்யே பேசுகிறது
சோதிடக் கிளி !
=====
காய்ந்த மரம்
இலைகளின் சலசலப்பின்றி
பறவைக் கூடு !

மேலும்

இது குறும்பு தான்! 19-Jul-2014 8:41 am
பழுப்பது பழத்தின் சுதந்திரம் கொத்துவது குருவியின் சுதந்திரம் புழுப்பது புழுக்களின் சுதந்திரம் வற்றிய குளமெனினும் – என்றிருந்தால் சொல்லவந்தது முழுமையாகியிருக்குமோ? சோதிடக்கிளிக்கு அது பழக்க தோஷம்! காய்ந்த மரத்தில் இலைகளின் சலசலப்பு மட்டுமல்ல பறவைகளின் கலகலப்பும் இருக்காதே! உன்னை மாதிரி ஹைக்கூ எழுத முடியாது கலை! மாதிரிக்குப் பார்க்க எனது கவிதை 203827 இப்பொழுதெல்லாம் உன் காட்டில் பொழிகிறது அமைதி ! 19-Jul-2014 8:40 am
துளிப்பா = காய்ப்பா , புளிப்பா ,இனிப்பா பாரப்பா ,இது பா ..அரும்பா ,குறும்பா , அதை நான் சொல்ல விளைந்தால் இருவருக்கும் வம்பா !வெம்பா !படைப்பா அன்பாய் சிரிப்பாய் 01-Jun-2014 6:21 pm
நிசப்தமான தோப்பு ! கவி அருமை ! 01-Jun-2014 6:13 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) கே-எஸ்-கலைஞானகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-May-2014 10:37 am

தமிழினை தலையில் வைத்தேன் - நற்
தரத்தினை சகத்தினில் கேட்டேன் !
உமிழ்வதே தொழிலென கொண்ட - சில
ஊர்வன நெளிவதும் கண்டேன் !

உடலினை விற்றுப் பிழைக்க - இந்த
ஊர்விட்டு ஓடிய பூச்சிகள்
விடமென வார்த்தைகள் வீசி - என்
விடியலை அழிக்குமாம்! சிரிப்பு !

கொள்ளியில் பொசுக்கி என்னை - நீ
கொல்வது தானோ வீரம் ?
எள்ளியே சிரிக்குதென் நெஞ்சு - ஏன்
என்தமிழ் வாட்டுதோ உன்னை ?

கோரத்தை உனக்குள் வைத்தே - என்
தாரத்தை தூற்றிய நாயே !
வீரத்தை என்னிடம் காட்டு - உனை
வேரோடு அழிப்பேன் நானே !

நேருக்கு நேரெனை நோக்க - உன்
நெஞ்சினில் தைரியம் உண்டா ?
போருக்கு வந்துநில் என்றால்- நீ
போர்வைக்குள் மறைவது

மேலும்

மறத்தமிழன் நீ மிரட்டியவன் மரமண்டையோ ? வார்த்தை வாளில் வீரத்தை பார்த்து செத்திருக்க வேண்டும் .கொதிக்கும் தணலை தலையில் கொட்டிக்கொள்ள எவனும் விளைவானோ? விளைந்தால் அவனும் அழிவானே ! சரகனை மாலையாக்கி சவ ஊர்வலம் நடத்திவிட்டாய் !மரித்தவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் தரைதொடட்டும் ... 01-Jun-2014 6:42 pm
கொலை மிரட்டலுக்கு பதிலாய் கலையின் கலை திரட்டல்...அருமை சேக்காளி...! முகம் காட்டவோ, முகவரி நீட்டவோ திராணியற்ற யாரோ ஒருவன் / ஒருத்தி உனக்கு எதிரியாய் வர இயலாது...ஏனெனில் உனக்கு எதிரியாவதற்க்கு கூட சில தகுதிகள் வேண்டும்...மற்றபடி இம்மிரட்டல், வாருகையில் வீழும் முடிகளுக்கு சமம். நீ கலக்கு சித்தப்பு ! 01-Jun-2014 6:16 pm
கொலை மிரட்டலுக்கு தங்கள் பதிலடி நச் அண்ணா...! 28-May-2014 4:20 pm
உடலினை விற்றுப் பிழைக்க - இந்த "ஊர்விட்டு ஓடிய பூச்சிகள் விடமென வார்த்தைகள் வீசி - என் விடியலை அழிக்குமாம்!.. சிரிப்பு !" கடலினை விற்றும் காசுபார்க்க அலையும் கூத்தாய் திரியும் கூட்டம்..! கரையின் ஓரம் வந்தால் கூட வாரிச்சுருட்டும் கலையின் கவிதை..! கவலை கொள்ள கலையும்கூட சவலைக் குழந்தை எனும் நினைப்பு எவளுக்கோ..எவனுக்கோ இருந்தால் ஐயோ..பாவம்.அவருக்காய் சற்று அழுதிடுவோம்.., விரைவில் மனநலம் பெறவும் வாழ்த்திடுவோம்..! 20-May-2014 9:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

இவர் பின்தொடர்பவர்கள் (41)

இவரை பின்தொடர்பவர்கள் (41)

tamilnadu108

tamilnadu108

இந்தியா
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
மேலே