பறவைத் தோப்பு - கே-எஸ்-கலை

குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
=====
வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !
=====
தேக்கு மரக்காடு
அலகொடிந்துக் கீச்சிடும்
மரங்கொத்தி !
=====
வாய் திறந்தால்
பொய்யே பேசுகிறது
சோதிடக் கிளி !
=====
காய்ந்த மரம்
இலைகளின் சலசலப்பின்றி
பறவைக் கூடு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-May-14, 8:20 am)
பார்வை : 270

மேலே