கோழைத் துரோகிக்கு - கே-எஸ்-கலை

தமிழினை தலையில் வைத்தேன் - நற்
தரத்தினை சகத்தினில் கேட்டேன் !
உமிழ்வதே தொழிலென கொண்ட - சில
ஊர்வன நெளிவதும் கண்டேன் !

உடலினை விற்றுப் பிழைக்க - இந்த
ஊர்விட்டு ஓடிய பூச்சிகள்
விடமென வார்த்தைகள் வீசி - என்
விடியலை அழிக்குமாம்! சிரிப்பு !

கொள்ளியில் பொசுக்கி என்னை - நீ
கொல்வது தானோ வீரம் ?
எள்ளியே சிரிக்குதென் நெஞ்சு - ஏன்
என்தமிழ் வாட்டுதோ உன்னை ?

கோரத்தை உனக்குள் வைத்தே - என்
தாரத்தை தூற்றிய நாயே !
வீரத்தை என்னிடம் காட்டு - உனை
வேரோடு அழிப்பேன் நானே !

நேருக்கு நேரெனை நோக்க - உன்
நெஞ்சினில் தைரியம் உண்டா ?
போருக்கு வந்துநில் என்றால்- நீ
போர்வைக்குள் மறைவது வெட்கம் !

வீரமுன் அகத்தினில் உண்டா - என்
வீறுதமிழ் முன்னே வாடா(டி) !
சூரத்தனம் எல்லாம் பொய்யோ? - தூ...
ஊறுஉனை கொல்வேன் போடா(டி) !

எந்தையும் தாயும் எனக்கு - தந்த
இவ்வுயிர் அழிந்திட முன்னம்
சிந்தையில் சீர்த்தமிழ் ஏற்றி - அந்த
சிறுமைகள் அழிப்பது திண்ணம் !

கூற்றனை அழிக்கும் கூற்று - தினம்
ஊற்றென பெருகும் என்னில் !
தூற்றனைக் கொளுத்திப் பொசுக்கி-யான்
மாற்றங்கள் செய்வேன் பாரீர் !

==================================
(நேற்று எனக்கு முகநூலில் வந்த ஒரு கொலை மிரட்டலுக்கு இதுவே பதில் !)

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-May-14, 10:37 am)
பார்வை : 209

மேலே