கலை மழை – கே-எஸ்-கலை

ஒரு பக்கம் மாமரம்
ஒரு பக்கம் கொய்யா மரம்
மதில்மேல் பூனையும் அணிலும்...!
=
நெருக்கமாய் இருவர்
வீடு முழுவதும் புற்றீசல்
விளக்கணைத்துக் கொண்டார்கள்....!
=
செங்குத்தான சுவர்
தடங்கலின்றி ஏறிச் செல்லும்
எறும்புக் கூட்டம் !
=
சேற்றுநீர் குழி
ஆனந்தமாய் நீராடும்
காகங்கள்....!
=
காத்திருந்து காத்திருந்து
உறுமீன் பிடித்தது மீன்கொத்தி
கழுகுக்கு மீனும் மீன்கொத்தியும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-Aug-16, 7:43 am)
பார்வை : 305

மேலே