இராக்கோலம் II - கே-எஸ்-கலை
கன்னி முகம் கனியமுதம்
கண்ணிரண்டும் மதுவமுதம் !
காதுமடல்... கழுத்தோரம்
கம்பன் செய்த கைவினைகள்...!
கஞ்சமில்லா நெஞ்சிரண்டும்
கள்ளூற்றும் மலை முகடு...!
கார்குழலி.... இடை முழுதும்
கஞ்சன் செய்த செய்வினைகள்...!
சங்காத்தி சுண்டு விரல்
செங்காந்தள் மலர்ச் சோலை !
சண்டாளி இதழிரண்டும்
சோமபான தொழிற் சாலை !
நெஞ்சை வாசித்த காரிகை
நினைவில் வசிக்கும் நறுமுகை
நெகிழ்ச்சியில் மயங்கி நெருங்கிட
நரம்பினில் ஏற்றினாள் நெருப்பினை !
ஒற்றை விரல் நான் பற்ற
உடல் முழுதும் தீ பற்ற
உற்றவள்..தேன் ஊற்றவள்
உரசிட... யான் வெற்றினேன்...!
நுதலோடு இதழ் புதைத்து
நுனி நாவால் நாசி தொட்டு
இதழ் ரேகை இதழ் மாற்ற
இதயத் துடிப்பது... எகிறித் துடித்தது !
எழுத்தோடு இல்லாத
ஏதேதோ வார்த்தைகள்
கழுத்தோடு பேசியது
காமதேவன் நாக்குகள்....
இடை பற்றி நடை பயில
இரு கரங்கள் பயிற்சிக்க
தடம் மாறி இடம் பிடிக்க
தடுமாறின நாற்கால்கள்....
உடல் கோர்த்து இதழ் சேர்த்து
உன்மதத்தில் உய்ந்து நிற்க....
ஊடறுக்க வந்த காற்று
உடல் வியர்த்து திரும்பியது...
--------------------தணிக்கை செய்யப்பட்ட வரிகள்
--------------------தொடரும்...!