இரண்டாம் காதல்

தூறல் தீர்ந்த பின்பும்
மழை மீதமுண்டு – உன்
காதல் தோற்ற பின்பும்
காலமுண்டு.…

உருகிப் போனால் கூட– பனி
உயிர்ப்பதுண்டு - சிறு
விளக்கில்லாமல் போனால் கூட
நிலவு உண்டு…

இறந்த பூவொன்று வசித்துக்கொள்ள – உன்
இதயம் ஒன்றும் சதுக்கமல்ல...!
இடம் தருவாய் அதற்குள்ளே
இதம் தருவேன் நான்மெல்ல…

உன் காதல் சிறகின்
காயம் தீர்க்க
காத்திருக்கின்றேன்..!

கண்ணீரிலே கண்கள் மூழ்கி
தத்தளிக்கும் நேரம்..
காப்பாற்றிட என் விரல்கள் நீளும்
கண்ணீர் வடித்து விடும்...

மின்னல் பெண்ணவள் மறைந்தால்
வானவனே வாட்டம் வேண்டாம் – உன்
வாழ்வில் வண்ணம் தீட்டிடுவேன் - ஒரு
வானவில்லைப் போல..!

அவள் கனவில் வந்திட பூசிப்பேன்..
உன் இதயம் தந்திட யாசிப்பேன்..
அதில் அவளின் நினைவுடன்
எந்தன் நினைவையும் சேர்த்தடைப்பேன்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (8-Nov-16, 10:08 pm)
Tanglish : irandaam kaadhal
பார்வை : 1263

மேலே