கணக்கில் வராத கனவுகள்

அவித்த முட்டையில்
அங்கங்கே சிறு வெடிப்பு
கருக்கலைப்பு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டத்தில் ஓட்டைகள்
சகஜம்தானே
புல்லாங்குழல்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யார் நனைந்தாலும்
நனையாமல் இருக்கிறது
மழை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெற்றிக் கண் திறப்பினும்
குற்றமில்லை
தேங்காய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அழகு குறிப்பில்
ஆபத்து பின்குறிப்பு
ரோஜாமுள்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விலைவாசி ''ஏறுவதை''
விளையாட்டாய் நினைக்குமா?
ஏணி...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்து ரூபாய் காணிக்கையில்
பத்திரமாய் இருக்கிறது
கடவுளின் நம்பிக்கை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீர் ததும்பும் குளத்தில்
நீந்திக் கொண்டிருந்தது
நிலா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவலிலும்
கண்காணிப்பிலும் சிக்குவதே இல்லை
கைதிக்கு வரும் கனவு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் மெதுவாக நடந்தாலும்
ஓடிக் கொண்டுதான் இருக்கும்
காலம்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~ ஜின்னா ~~~~~~~~~~~~