முத்துமணி- கருத்துகள்

நன்றி தஞ்சையாரே

அழகு.... தோளோடு தோள் உரசினீரா,, தோலோடு தோல் உரசினீரா?

உம் பாடலோடு எம்மை ஓட வைத்ததையா உன் நடை.... அழகு

உணர்ச்சிகளின் உன்னத வெளிப்பாடு வார்த்தை
புணர்ச்சிகளோடு வருவதே கவிதையின் பிரசவம்.
அருமையாக வடித்து இருக்கிறீர்கள்
பெருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்....

இயற்கை உங்கள் இன் தமிழுக்கு இறங்கி வந்து தான் இப்படி தண்ணீரால் பூமியைப் போர்த்தியது போலும்... அழகான கவிதை. வாழ்த்துக்கள்

மெதுவாக வாசிப்பவரை அந்த சூழலில் வசிக்க வைக்கின்ற வசீகரம் இந்தக் கவிதைக்கு இருக்கிறது. மிக அழகான தமிழ் ஓவியம்.. அருமை. தொடர்க...

நன்றி திரு கோபி..


















































நிலவுப் பெண்
நிச்சயம் உரைப்பாள்
புலவா உம்மனம்
புலம்பிய தமிழ்ப்பண்!!!

அருமையான பதிவு. அழகான வரிகள்.

நம்பி
கை வை என்ற
தம்பி,
மேலும் பல கவிதை
செய், செய்.

வாழ்த்துக்கள்: முத்துமணி, ஜகார்த்தா,

சோகத்தில் சுகப்படக் கற்றுக் கொண்டு விட்டால்
சுவைக்க இயலும் வாழ்வினை என்ற
தத்துவம் பொதிந்த தரமான கவிதை.

தொடர்ந்து எழுதவும்

அருமை..ஸர்பான்... தாய் என ஆராதித்தது தனிச்சுவை..

அன்பு நண்பா....

சமுதாயம் அழுக்காக இருக்கிறது. இந்த அழுக்குச் சமூகம் தன்னுள் விதவைகளை மூழ்கடிக்க முயற்சிக்கிறது...அந்த அழுக்கின் அவலத்தில் மூழ்கி விடாமல் மிதவையாய் வெளியே தெரிபவர்களான விதவைகளை மீட்டு வெளிக் கொணர வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்து உள்ளேன்.. தங்கள் கருத்துக்கு நெருடலாக எது புனையப்பட்டுள்ளது என்று விளங்க உரைத்தால் அறிந்து கொண்டு அடுத்து நடவாமல் பார்த்துக் கொள்வேன்.

எங்கள் மனதில் மாலையிட்ட மங்கை
தங்க நகைத் தனிநடிப்பினில் கங்கை
எங்கள் பள்ளத்தூர் வளர்ந்த பசும்பொன்-யாரும்
தங்கள் உள்ளத்தூரர் தானெனும் பெரும்பெண்
வெள்ளித் திரையினையே வென்ற வெண்ணிலா
பள்ளி கொள்ளச் சென்றது இன்று உலா

ஆடலா, பாடலா, அருந்தமிழ்ப் பேச்சா,
நாடகமா இந்நாளின் நவீன ஊடகமா
மனோ ரமாவே மயக்குவார் சும்மா
ஏனோ தானோ என்றில்லாத அம்மா
ஆச்சியாய் அனைவரும் அறிந்த அக்கா- தமிழர்
பேச்சிலும் மூச்சிலும் பிரியாது நிற்பார்

கவி.முத்துமணி, ஜகார்த்தா, இந்தோனேசியா

அழகிய இயற்கை இசைந்த வர்ணனை.. கம்ப நாடன் மிதிலைக்கு இப்படித்தான் அழைத்துச் செல்வான்...


முத்துமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே