வாழ்ந்துக் காட்டுவோம் நாமும்
அன்பெனும் அறம் தழைக்க
பண்பெனும் உரமிடுங்கள் !
விவேகம் நிலைத்து ஓங்கிட
ஒழுக்கத்தை வித்திடுங்கள் !
சாதியெனும் அரக்கன் ஒழிந்திட
வெறிதனை துறந்திடுங்கள் !
மதமெனும் மாச்சர்யம் நீங்கிட
மனிதத்தோடு பழகிடுங்கள் !
சமத்துவ சமூகம் அமைந்திட
சகோதரத்துவம் வளர்த்திடுக !
வன்முறை அறவே அழிந்திட
வன்மமின்றி வாழ்ந்திடுக !
அவனியில் அமைதியே நிலவிட
வழிகாண்போம் ஒன்றிணைந்து !
வாழ்ந்துக் காட்டுவோம் நாமும்
வளரும் தலைமுறை வளம்பெற !
பழனி குமார்
03.11.2015