சிந்தையின் விந்தை
சிந்தையின் விந்தை
துன்பத்தில் துவழாது
இன்பத்தில் மயங்காது
தோழ்வியே வெற்றியின்
துவக்கமாய் கொள்வதும்
வாக்கினில் வாய்மையும்
போக்கினில் தூய்மையும்
கடமையில் கருத்தையும்
கண்ணியம் உணர்வுமாய்
சோம்பலை சாம்பலாக்கி
ஓம்பலில் உயர்வாக்கி
கனவையும் நினைவாக்க
மனதி்னை உறுதியாக்கி
ஆணைக்கு அடிபணியா
சேனையில் யானையாகி
அன்புடன் அடியெடுத்து
பண்பினிக்க பலனுமாக்கி
நேர்மையில் கூர்மையாய்
வறுமையில் பொறுமையாய்
சிறுமையை சீர்படுத்தி
பெருமையில் எளிமையாய்
சிரத்தையாய் செயல்படின்
சிந்தையும் செம்மையாகி
சிகரமும் சிறிதெனதோன்றி
விந்தையாய் வெற்றியே வியப்பின்றி கிட்டும்!!!
பிரியமுடன்
அசுபா