பிரிவில் காதலை ரசிக்கிறேன்
கண்கவர் அழகில்லை நான்
எனினும் எண்ணங்களில்
வண்ணம் நிறைந்தவள்...
பிறர் என் வாழ்வில் கண்ணீரை
விதைத்தாலும் புனைகை பூக்களை
பூப்பவள் நான்....
உன் கைகோர்க்கவும்,
உன் தோள் சாயாவும்,
நம் விதியில் எழுதப்படவில்லை...
உன் எண்ணங்களில் கலந்து,
உன் மனதில் வாழும்
வரம் கிடைத்தது எனக்கு...
சராசரி பெண்ணாய் இராமல்
நம் பிரிவில் காதலை ரசிக்கிறேன் நான்...!