நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்றுMano Red
நீயும் நானும் யாரோ இல்ல
மனசெல்லாம் நீ தான் புள்ள ..
நாலு பக்க நெஞ்சுக்குள்ள
காலு வைக்கும் மயிலே,
நானும் கொஞ்சம் பாவமடி
காதல ஆழமா இறக்கி வை...!!
போனாப் போகுதுன்னு
பொறம்போக்கா நான் திரிஞ்சேன்,
பொட்டப் புள்ள உன்னப் பாத்து
பொசுக்குனு கிறங்கிப் புட்டேன்..!!
சொன்னவன் பொய்யெல்லாம்
சொல்லாமப் போகையிலே,
சோலைக்குயில் உன் பேச்சுல தான்
சொர்க்கமே தெரியுதடி..!!
பாவிப் பய மக
படபடன்னு துள்ளி வருகையிலே
பல்லுப் போன கிழவன் கூட
பல்லுத் தேச்சு பாக்குறாண்டி..!!
சிறுக்கி மக உன்ன
சிரிக்க சொல்லி கேட்கையிலே,
சிதம்பர ரகசியமெல்லாம்
சிதறித் தான் போகுமடி...!!
கிறுக்குப் பய என்னைய
கிறங்கடிக்க வச்சுப் புட்ட,
சூதுவாது தெரியாம தான்
சூதுகொண்டு ஓடிப் போய்ட்ட..!!
நெசமா உன் காதல
நெஞ்சத் தொட்டு சொல்லிப் பாரு,
நெஞ்ச கிழிச்சுக் காட்டுறேன்
நெருப்ப அள்ளிக் குடிக்கிறேன்..!!
மிச்சமுள்ள உசுர வச்சு
சொச்ச நாள கடத்திடுவேன்,
பிச்சை எடுத்த பழக்கமில்ல
காதல் பிச்சை எடுக்க நினைக்கிறேனே..!!