இன்று ஓர் நாள் மட்டுமாவது- ஆனந்தி

முடமான பூமி
சாதிக்குள்ளும் சகதிக்குள்ளும்
தோய்ந்து கிடக்க,
அரசியல் சாக்கடை
நாற்காலி சண்டைகள்
நட்சத்திர விடுதிகளில் ஆட்டம்
அரசு மதுபான கடைகளுக்குள் ஓட்டம்
அலங்கார மேடைகள்
அகம்பாவ வீணைகள்
விலைவாசி ஏற்றம்
பேருந்து நெரிசல்
ஊழலின் உளறல்
வாகன புகை
வாட்டிய வெயில்
சிறுமி பாலியல் வன்கொடுமை
ஏழையின் கண்ணீர்
காதல் சர்ச்சைகள்
அலுவலக பணிசுமை
திரையரங்க குடமுழுக்கு
சமூக வலைதளப் போர்
செல்பி பெருமை
ஓய்ந்து கிடக்கட்டும்
எல்லாம் இன்று
ஓர் நாளாவது.
கொட்டி தீர்த்திடு
வானமே உன் கண்ணீரை
பதிவிட்டிடு காற்றே
உன் ஆதங்கத்தை
வாளாய் சுழற்றி....
நிகழ்காலத்தின் காற்றே
புகா போர்வைக்குள்
உறங்கிக்கொள்கிறேன்
நானும் கொஞ்சம்....
புயல் என்னையும் தூக்கி
வீசும் வரை....