நன்னாள்
நன்னாள்
~~~~~~~~
காரிருட் கழிவினில் கண்கள் திறந்து
கைதொட்ட எண்ணெய்
சிரம் தொட்டுக் கால் தொட
கரி விறகுக் கங்கு சுமந்த
கலம் கொண்ட நன்னீர்
கசடு களைய
மெய் சிறக்கப் பருத்தி தரித்து
கரண்டி திருப்பிய வடை வெள்ளைப் பணியாரம்
கரம் சுத்திய முறுக்கு கனிந்த அதிரசமும்
கூடவே சீடையும் கதவுகள் தாண்டக்
கர்வமழித்துக் கலந்து பேசி விழிகள் சுரக்க
கண்கவர் ஒளி மழை கவிதை எழுதக்
காகிதக் கழிசல்கள் கவர்ந்த வீதியில்
காலடி பதித்துக் கடந்திடும் வேளை...
...மீ.மணிகண்டன்