பட்டாசகர் பாடுகிறார்

பட்டாசு வித்து வித்தே
பணக்காரன் ஆனவன்
பலபேரின் காசைச்
கரியாக வச்சவன்
மகிழ்ச்சியிலே பாடுகிறேன்
எம்பாட்டைக் கேளுங்க .. (பட்டாசு)

சொன்ன விலைக்குப் பட்டாசை
வாங்கிச் செல்லப் பெருங்கூட்டம்
பேரம் பேசும் யாரும்
எங்கடைக்கு வருவதில்லை.. (பட்டாசு)

புதுப் புது வெடிகள் எல்லாம்
விற்பனைக்கு வருவதால்
பட்டாசின் மவுசு மட்டும்
ஒருநாளும் குறையாது. (பட்டாசு)



படிச்சவரும் வெடிப்பாங்க
கைநாட்டும் வெடிப்பாங்க
பட்டாசு வெடிப்பதில் மட்டும்
சமத்துவத்தைக் காண்பாங்க...
(பட்டாசு)

எந்த விழா ஆனாலும்
வெடியின்றி நடக்காது
காசைக் கரியாக்கி
மகிழ்ந்திடும் மக்களால் . (பட்டாசு)

பகுத்தறிவு பேசுவோரும்
பட்டாசை வெறுப்பதில்லை
ஆச்சாரம் பார்ப்பவரும்
பட்டாசின் ரசிகர்களே ...(பட்டாசு)

கம்பி எண்ணி வருகின்ற
தலைவரையும் வரவேற்க
சரஞ் சரமாய் வெடித்திடுவார்
சந்தோச போதையிலே (பட்டாசு)

அறிவியல் படித்தவரே
பட்டாசின் அடிமையாய்
வெடித்து மகிழ்ந்திடுவார்
என் செல்வம் பெருகிடவே (பட்டாசு)

பட்டாசை உருவாக்கிய
இதய தெய்வம் வாழ்க வாழ்க
எந்நாளும் உன்னாலே
உயர்வடைவோர் பலபேர்கள் ..(பட்டாசு)

நன்றி நவிலல் எனதாக
நாளும் உனது புகழ் பாடி
நீ வாழ்க வாழ்கவென்று
என் பாட்டை முடிக்கிறேன்

எழுதியவர் : மலர் (9-Nov-15, 10:34 am)
பார்வை : 76

மேலே