யார் சொல்வது யார் கேட்பது

வாழ்க்கை கல்வி தந்து சென்றார் திருவள்ளுவர்
இன்று அவ்வழியில் நடப்பவர்கள் எத்தனை பேர்

உடல் மனதை பேணும் முறை தந்தார் திருமூலர்
அவ்வழியே இன்று பயணிப்பவர் ஒருவரும் இலர்

கருணை ஜீவகாருண்யம் போதித்தார் வள்ளலார்
கொல்லாமை நோன்பு பூண்டு வாழ்பவர்கள் யார்

சாதிமத பேதமில்லை என்று முழங்கினார் பாரதி
இன்றும் மக்களுக்கு சாதியும் மதமும் தானே கதி

பலவித நற்சிந்தனைகளைத் தரும் ராமசுப்ரமணி
இதை செவிமடுப்பாரோ எவரேனும் ஒரு கண்மணி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-May-24, 3:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 21

மேலே