மாறாதோடு மானிடா

**********"*********"***
காதிலாது கானமேது காலிலாது வீதியேது
காடிலாது ஆறுமேது கூறடா
ஓதிடாது வேதமேது ஓடிடாது மேகமேது
ஓடமேனு நீரிலாது ஏதடா
மாதிலாது வீடுமேது மாசிலாத தாருமேது
மாறிடாத நாளுமேது மானிடா
தாதிலாத பூவுமேது தாயிலாது சேயுமேது
தாறுமாறு பேசிநீதி கூடுமோ?
*
கூவிடாது சேவலேது கோபமோடு தாபமேது
கூறிடாது ஆறலேது கூறடா
பூவிலாது காயுமேது போதையோடு பாதையேது
போரிலாடு தீவிலூறு தானடா
பாவியோடு பாசமேது பாலையோடு
சோலையேது
பாறையோடு வேருமேது பாரடா
சாவிலாத தோருமாறு சாதிநூறு கூறுபோட
சாதியாது பாவியாத லேனடா?
*
நாறிடாத மீனுமேது நாளிலாது மாதமேது
நாடிடாம லேதுமேது நாயகா
ஆறிலாம லேழுமேது ஆசையேயி லாததாரு
ஆவியோடு ஆவியாகு மாணவா
ஏறிடாம லேணியோடு ஏனெனோடு கோபமானு
ஏறிடாது போறியேனு கூறிடா
மாறினாலு மாறிடாத மாயமான நேயமோடு
மாறிடாம லோடியாடு மானிடா!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Nov-24, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 27

மேலே