கனவுகளோடு

கனவுகளோடு கலந்திருந்தேன்
கவலையில்லாமல் வாழ்ந்திருந்தேன்
ஓடாகத் தேயும் வரை
ஓயாமல் உழைத்திருந்தேன்…

சிறப்பான பணிகள் செய்து
சீரான அறிவூட்டி,
செழிப்பாக வளர்த்துவிட்டேன் மக்களை (என் செல்வங்களை)..
அணையாத ஒளி விளக்காய்
அகிலம் போற்றும் உதாரணமாய்
இறைவன் அருள் பெற்று
இனிதாக வாழ்வதற்கே!

இன்னும் நான் காண வேண்டும்
இவ்வுலகில் செய்த நன்மைகளை..
இறைவனிடம் வரம் கேட்டேன்
இறுதிவரை அதைக் காண…👆

அதனால்தான்….!

கடல்கூட எனைத் தாழ்க்கவில்லை
கதிரை ஒன்றைத் தோளில் வைத்து
காக்கின்றதே என் பணி தொடர…

காண்கின்றேன் அனைவரையும்
காலங்கள் மாறும்வரை
காட்சிகள் கடந்து செல்லும் -என்
கவிதைகளும் பின்தொடரும்!!!

எழுதியவர் : ஏசீயெம் பதுர்தீன் (19-Jul-25, 6:28 pm)
சேர்த்தது : ACM Badurdeen
Tanglish : kanavugalodu
பார்வை : 30

மேலே