ACM Badurdeen - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ACM Badurdeen |
இடம் | : Sri Lanka |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 5 |
பள்ளிப் பருவத்துக் கவிஜன்
பாதியில் நிறுத்தியிருந்தேன் -இன்று
புதியதாய்த் தொடர்கிறேன் இப்
புவியின் விடியலுக்காய் !
வெண்ணிலா ஒளிசிந்தும்
-----மாலை பொழுதினிலே
கண்ணில் தீபமேந்தி
----நீ காதலில் வந்து
எண்ணிலா கற்பனையை
-----என்னில் ஏற்றிவிட்டாய்
எண்ணமெல்லாம் வானவில்
-----நீரோடை துள்ளியோடுது
கனவுகளோடு கலந்திருந்தேன்
கவலையில்லாமல் வாழ்ந்திருந்தேன்
ஓடாகத் தேயும் வரை
ஓயாமல் உழைத்திருந்தேன்…
சிறப்பான பணிகள் செய்து
சீரான அறிவூட்டி,
செழிப்பாக வளர்த்துவிட்டேன் மக்களை (என் செல்வங்களை)..
அணையாத ஒளி விளக்காய்
அகிலம் போற்றும் உதாரணமாய்
இறைவன் அருள் பெற்று
இனிதாக வாழ்வதற்கே!
இன்னும் நான் காண வேண்டும்
இவ்வுலகில் செய்த நன்மைகளை..
இறைவனிடம் வரம் கேட்டேன்
இறுதிவரை அதைக் காண…👆
அதனால்தான்….!
கடல்கூட எனைத் தாழ்க்கவில்லை
கதிரை ஒன்றைத் தோளில் வைத்து
காக்கின்றதே என் பணி தொடர…
காண்கின்றேன் அனைவரையும்
காலங்கள் மாறும்வரை
காட்சிகள் கடந்து செல்லும் -என்
கவிதைகளும் பின்தொடரும்!!!
ஏனோ பல வருடங்கள்
எளுதாமல் விட்டேனே
எங்கு சென்றாய் என் பேனாவே..
தூங்கிச் சென்ற எண்ணக்
குமுறல்களை மீ்ண்டும்
எளுப்பச் சென்றாயோ.. இல்லை
மனசுக்குள் என்றோ
மளுங்கிப் போய் விட்ட
எண்ணக் கதவுகளை.. மீண்டும்
திறக்கச் சென்றாயோ..
காலச் சக்கரத்தின்
கனமான வேலைகளால்
களையுற்றுப் போனாயோ... உன்
கவிதைகளால் உலகிற்கு
மிளிர்ச்சியும் உண்டென்று
மகிழ்ச்சியாய் நவின்ற நீ..
என் இதயத்தைப் பராக்காக்கி
உறங்கத்தான் சென்றாயோ..
ஓ.. என் இதயப் பேனாவே
எழும்பிவிடு அவசரமாய்..
எளுச்சிக்காய் எழுதவென்று
எழுந்து நில்.. இப்போதே..!!
ஏனோ பல வருடங்கள்
எளுதாமல் விட்டேனே
எங்கு சென்றாய் என் பேனாவே..
தூங்கிச் சென்ற எண்ணக்
குமுறல்களை மீ்ண்டும்
எளுப்பச் சென்றாயோ.. இல்லை
மனசுக்குள் என்றோ
மளுங்கிப் போய் விட்ட
எண்ணக் கதவுகளை.. மீண்டும்
திறக்கச் சென்றாயோ..
காலச் சக்கரத்தின்
கனமான வேலைகளால்
களையுற்றுப் போனாயோ... உன்
கவிதைகளால் உலகிற்கு
மிளிர்ச்சியும் உண்டென்று
மகிழ்ச்சியாய் நவின்ற நீ..
என் இதயத்தைப் பராக்காக்கி
உறங்கத்தான் சென்றாயோ..
ஓ.. என் இதயப் பேனாவே
எழும்பிவிடு அவசரமாய்..
எளுச்சிக்காய் எழுதவென்று
எழுந்து நில்.. இப்போதே..!!
விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள்
மண்ணில் மறையவேண்டும் -இம்
மாந்தரின் மடமைகள்.
வார்த்தையில் மிளிர வேண்டும் -நல்
வாய்மையும் நேர்மையும்
நடத்தையில் காணவேண்டும் -எம்
நம்பிக்கையும் உயர் குணமும்.
என்றும் எப்போதும் - வாழ்வில்
எளிமையைப் பேணவேண்டும்
ஏழையின் நெஞ்சில் - காணும்
ஏக்கத்தை மறைக்க வேண்டும்.
சொல்லும் செயலும் - ஒன்றாய்
சுடரொளி வீச வேண்டும்
பூமியின் மைந்தரெல்லாம் -எம்மைப்
போற்றியே தொடர வேண்டும்.
விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள் ..
வானவர் அறிந்து கொண்டு -எம்
வாசலுக்குள் வரவேண்டும் !
வட்ட நிலாவொன்று
வடிவான 'ஷோள்' போட்டு
வானத்தில் வந்ததோ என
மெய் மறந்து நின்றேன்
ஆஹா...!
நீலப் பட்டுடுத்தி
நீதான் வந்தாயோ..
நெடிய முக்காடிட்டு என்
நெஞ்சினை மலரவைக்க..
புன் முறுவல் பூக்கையிலே
பரு ரெண்டு சிவத்து நின்று
பாவையுன் முகத்தினிலே
பசுமை தருகிறதே.. உன்
பாசத்தின் விண் விளக்கோ !
இல்லை...
என் இதயத் துடிப்பில்
எழுந்திட்ட
மின் பொறித் தாக்கமோ !!
விட்டுச் சென்ற
பாதையினை மீண்டும்
தொட்டுச்செல்ல
விளைகிறேன்...
பட்டுப்போன கொடி
பசுந்தளிர் விடுவதில்லை,
எனினும்
சுட்டுத் தீய்ந்த உள்ளம் என்றோ
சுடரொளி வீசுந்தானே;
கட்டுக் கோப்பில்லாக்
காதல் வாழ்வதனால்
தட்டுத் தடுமாறித்
தகிக்கின்ற உயிருக்கு -உன்
சொட்டுக் கண்ணீரால்
சோபனம் சொல்லாயோ !
நண்பர்கள் (11)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

கிறுக்கன்
குடந்தை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
