என் இதயப் பேனாவே
ஏனோ பல வருடங்கள்
எளுதாமல் விட்டேனே
எங்கு சென்றாய் என் பேனாவே..
தூங்கிச் சென்ற எண்ணக்
குமுறல்களை மீ்ண்டும்
எளுப்பச் சென்றாயோ.. இல்லை
மனசுக்குள் என்றோ
மளுங்கிப் போய் விட்ட
எண்ணக் கதவுகளை.. மீண்டும்
திறக்கச் சென்றாயோ..
காலச் சக்கரத்தின்
கனமான வேலைகளால்
களையுற்றுப் போனாயோ... உன்
கவிதைகளால் உலகிற்கு
மிளிர்ச்சியும் உண்டென்று
மகிழ்ச்சியாய் நவின்ற நீ..
என் இதயத்தைப் பராக்காக்கி
உறங்கத்தான் சென்றாயோ..
ஓ.. என் இதயப் பேனாவே
எழும்பிவிடு அவசரமாய்..
எளுச்சிக்காய் எழுதவென்று
எழுந்து நில்.. இப்போதே..!!