பாவையுன் முகத்தினிலே

வட்ட நிலாவொன்று
வடிவான 'ஷோள்' போட்டு
வானத்தில் வந்ததோ என
மெய் மறந்து நின்றேன்

ஆஹா...!
நீலப் பட்டுடுத்தி
நீதான் வந்தாயோ..
நெடிய முக்காடிட்டு என்
நெஞ்சினை மலரவைக்க..

புன் முறுவல் பூக்கையிலே
பரு ரெண்டு சிவத்து நின்று
பாவையுன் முகத்தினிலே
பசுமை தருகிறதே.. உன்
பாசத்தின் விண் விளக்கோ !
இல்லை...

என் இதயத் துடிப்பில்
எழுந்திட்ட
மின் பொறித் தாக்கமோ !!

எழுதியவர் : ஏசீஎம் பதுர்தீன் (21-May-14, 8:01 pm)
பார்வை : 70

மேலே