ஜெய்வசந்த் சிவஞானம் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெய்வசந்த் சிவஞானம் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 12-Aug-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 260 |
புள்ளி | : 73 |
தேடிக்கொண்டிருக்கிறேன்
இது ஆள்பவன்
விளையாட்டோ!!
இல்லை
எதிர்ப்பவன்
தலையீட்டோ!!
ஆதிக்க சக்திகளின்
தீவிரவாதமோ!!
இல்லை
தீவர சக்திகளின்
ஆதிக்கமோ!!!
தெரியவில்லை
எங்களுக்கு
எது உண்மை என்று!!!
எங்களுக்கு தெரிந்த
ஒரே உண்மை
இறந்தவன்
என் தமையன்
இறந்தவன்
என் தோழன்!!
கண்ணீரால்
வரபோவதில்லை
அவர்களின் உயிர்
காலனால் பறிக்கப்பட்ட
என் உறவுகளின் உயிர்!!!
காலத்தை மட்டுமே
நம்பி பயணிக்கின்றோம்
ஒரு நீதியை தேடி!!!
வீரவணக்கம்🙏🙏🙏🙏😔😔😔
அடடே
மேடு பள்ளங்கள்
எத்தனை எத்தனை
ஒருவேளை
நிலவின் செயற்கைகோள் புகைப்படமோ??
இல்லை இல்லை ஒரு வாரத்துக்கு முன்னாடி போட்ட "எங்க ஊரு ரோடு"!!!!
நீங்க ரெண்டும் பேரும் இன்னும் எத்தனை நாளுக்கு தான் பிரிஞ்சே இருக்க போறீங்க?
உங்க ரெண்டுபேருக்கும் உள்ள அப்படி என்ன தான் சண்டை??
எங்களை பாக்குறவங்க அதிகமா கேக்குற கேள்விகள் இதுதான்.
என்னமோ எங்க வாழ்கை மேல அவங்களுக்கு என்ன தான் அவ்வளோ அக்கறையோ.
ஒரு பழைய கெழவி அடிக்கடி சொல்லும் "வீட்டுக்குள்ள விட்டத்தை பார்த்து பேச வக்கில்லாதவன் வீதியில போறவங்கள பத்தியெல்லாம் பேசுவானு" அது தான் எனக்கு ஞாபகம் வருது.
நாங்க ரொம்ப பிரிஞ்சும் போய்டல ரொம்ப நெருங்கியும் வந்துடல.
எங்க எல்லை எவ்ளோன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.
நாங்க இப்படி இருந்த மட்டும் தான் ஒன்னாவே இருப்போம்னு எங்களுக்கு நல்லாவே

படிப்பவனுக்கு படிப்பை
விரைவில் படிப்பை
முடிக்க ஆசை
படிப்பை முடித்தவனுக்கு
நல்ல வேலை
கிடைக்க ஆசை
வேலையில் இருப்பவனுக்கு
வியாபாரம்
செய்ய ஆசை
வியாபாரம் செய்பவனுக்கு
நிறைய பணம்
சேர்க்க ஆசை
நிறைய பணம்
சேர்த்தவனுக்கு
நிம்மதியாய் உறங்க ஆசை
நிம்மதியாய் உறங்கும்
பிச்சைக்காரனுக்கு
படித்திருக்கலாமோ என்று ஆசை.
காதலியின்
கைபிடிக்க
துணிவில்லா கோழைக்கு
கல்யாணமும்
கல்லறை தான்!!!!!
காணமுடியாது
சிலநேரம்
கணிக்கவும் முடியாது
தொட முடியாது
வெறுத்து இதை
தொலைக்கவும் முடியாது
பிடிக்க முடியாது
பிடிக்க நினைத்தால்
பிழைக்கவும் முடியாது
காதலா???கடவுளா???
..கடலில் கலந்த கண்ணீர்....
தினமும் சூரியனை திங்கும் அந்த மேற்கு மலைக்கு எதிரே தான்
என் ஊர்.
ஒரு முருகன் கோவில் அருகில் மாதா கோவில்..
ஊருக்கு ஒதுக்குபுறமாய்
நான் இருக்கும்
அந்த ஒற்றை பனைமரம்..
என் அம்மையை பார்த்தீரா...
பாட்டி..
குமரா.
சிரிப்பு
என்று சத்தங்கள்
வந்து கொண்டே
தான் இருக்கும்
என் பனையைத்தேடி..
எனக்காகவே
முற்றத்தில் சிந்திவிட்டு போகும் குழந்தை..
ராணுவம் கிழக்கு நோக்கி முன்னேறிவிட்டது
வானொலி கதைத்துக் கொண்டு இருந்தது...
எல்லோரும் அங்கும் இங்குமாக ஓட..
அடுத்து நம்ம ஊர் தான்
ஊர் காற்று சொல்லிக் கொண்டே
பதுங்கு குழியை ந
உறையும் குளிரில்
உடுத்தும் உடையில்
உடலை காத்தான்
வெள்ளையன்..!
அனல் வெயிலில்
அக்கினித் தனலில்
அப்படியிருக்க
அவசியம் என்ன??
கழுத்து வரை பொத்தன்
கை வரை சட்டை
அவசியம் இருந்தது
அவனுக்கு....
கதிரவன்
கதிர்கள்
காட்டாறாய் தாக்கும்
தேசத்தில் இது தேவையா??
உடுத்தும்
உடைதான்
ஒழுக்கம் என்றால்
காந்தி எங்கே??
ஆபாசம் இன்றி
அணியும் ஆடைகள்
அனைத்தும்
ஒழுக்கமே..
இதை
உரக்க சொன்னால்
ஒழுக்கமின்மை!!!!!!
அவளது
கவிதைச் சிரிப்பில்
கன்னத்தில்
குழி விழும் இடம்
என்பது....
கடிபடா ஆப்பிளில்
காம்பு கிள்ளி
எடுக்கப்பட்ட இடம்.....!
முகப்பு நூல் வாசகம்....
நண்பர்கள் (43)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கவிப்பிரியன்
சென்னை

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை