கவிப்பிரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிப்பிரியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2013
பார்த்தவர்கள்:  415
புள்ளி:  29

என்னைப் பற்றி...

வரலாறை தேடும் பொறியாளன் .

என் படைப்புகள்
கவிப்பிரியன் செய்திகள்
கவிப்பிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2016 8:53 pm

பெண்கள்

மானுட தேசத்தின்
மங்காத சுடரொளிகள் ;
மரணத்தின் காலடியில்
ஜனனத்தை விதைப்பவர்கள் ;

கனவுகளில் சிறகடிக்கும்
சிறிது நேர சிறு வயது
பட்டாம் பூச்சிகள்;

இளமை எனும்
நந்தவனத்தில் வாடும் வண்டிற்காக
பூத்து குலுங்கும் மலர் கொத்துகள் ;

வானுயர்ந்த கனவுகள் கண்களில் இருந்தும்
நாணத்தில் தலைகவிழ்ந்து
பூமியை மகிழ்விக்கும்
புதுமை பெட்டகங்கள் ;

கருமை கூந்தலில்
தென்றலை குடிவைத்து
எங்கும் மணம் வீசும்
தோட்டத்து மல்லிகைகள் ;

இரவின் இருளை விட
இதயத்தில் இருள் கணத்து ,
சோக இருளின் போர்வையில்
இல்லறம் நடத்தும்
விடியலை தேடாத
விட்டில் பூச்சிகள் ;

மனச்சுமைகள

மேலும்

பெண்கள்; கருத்துள்ள மலர்க்குவியல் பாராட்டுக்கள் நன்றி 08-Mar-2016 5:32 am
உண்மைதான் பெண் எனும் தாய் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் புதிதாய் பிறந்திருக்க முடியாது மகிமை போற்றும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2016 9:35 pm

எப்படி வந்தது ஜாதி ?





வணக்கம் .இப்போது சொல்லப்போகும் கருத்துகளை யாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் படித்து விட்டு உண்மை எது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் .இப்போது நமது நாட்டில் உருவாகும் பிரச்சனையில் பெரும்பாலனவை ஜாதி அதாவது caste என்ற ஒன்றை மையபடுத்தி உருவானவை அல்லது உருவாக்க படுகின்றவை .சமூகம் என்பது அனைவரையும் சேர்த்தே . முதலில் சமுகம் என்பது எப்படி பிரிவுகளாக மாறியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . ஒரு தனி மனிதனுக்கு ஒழுக்கம் என்ற ஒன்று ஏன் தேவை? அவன் தனித்தோ அல்லது ஒன்று சேர்ந்து வாழ ஒழுக்கம் என்ற ஒன்று தேவை .அதை சொல்வது தான் திருக்குறள் போன்ற அறநூல்கள். இந்த அறநூல்கள் எப்படி தோன்றியது .எப்படி எழுதப்பட்டது .

.முதலில் தமிழில் இந்து மதத்தில்உண்டான தர்மம் "வர்ணாசிரம தர்மம் ". இதன் அடிப்படையில் தான் பிரிவுகள் உண்டானது . இதன் அடிப்படையில் தான் பல அறநூல்கள் எழுதப்பட்டன .
இப்போது நமது மதத்தினரும் மக்களும் நாட்டில் பிரிவை உண்டாகியது இதுவே ,இதை ஏற்க முடியாது என்று பிரச்சனைகள் எழுந்தன.ஜாதியின் அடிப்படை இதுவே .இதை ஏற்க முடியாது என குரல் எழுப்பினர் .ஆனால் வர்ணாசிரம தர்மம் சொன்ன பிரிவுகள் நான்கு மட்டுமே . 

அவை1.உற்பத்தியாளர் (Developer) . சமூகத்துக்கு தேவையானதை உற்பத்திசெய்யும் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருவார்கள் .இவர்களே "சூதிரியன் " என்ற பிரிவினர்.இவர்களே சமூகத்தின் அடிப்படை.

2.உற்பத்தி செய்ததை விற்பனை செய்ய அனைவரிடம் கொண்டு செல்ல ஒரு பிரிவினர் தேவை.அவர்களே "விநியோகஸ்தர்கள்".அவர்களை வணிகன் அல்லது வைசிகன் என்று வரையறை செய்தனர் .
3. ஒரு சிலர் தனது பலம் காட்டி சமநிலை இல்லாமல் செயல் பட்டனர் .
அவர்களை ஒன்று சேர்க்க அனைவர்க்கும் சமமான நிலை சமூகத்தில் வர நிர்வாகிகள் தேவை பட்டனர் .அவர்களே "சத்ரியர் " என்று அழைக்க பட்டனர்.
4.சமூகம் வளர நாட்டில் வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகள் , வரையறை தேவைப்பட்டது . அறிவு சார்ந்த சமூக வளர்சிக்கு புத்திசாலிகள் தேவைப்பட்டனர் .அவர்களையே "பிராமணர் " என்று அழைக்கப்பட்டனர்.
இதை தாண்டி வந்த பிரிவுகள் ஏதும் இல்லை. பின்னர் எவ்வாறு இத்தனை பிரிவுகள் இத்தனை ஜாதி உருவானது . 
ஒரு பிராமணன் தனது பிள்ளை அறிவில் சிறந்தவன் இல்லை என்ற போதும் அவனையும் பிராமணன் என்ற பிரிவில் சொன்னதே  இதற்கு காரணம் .
சிலர் தான் இந்த பிரிவின் கீழ் வந்தால் நன்று என தனக்குதானே உட்பிரிவுகள் (ஜாதி ) வகுத்ததே இதற்க்கு காரணம் .இது அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் .
"இப்போது சொல்லுங்கள் நமது முன்னோர் வகுத்த "வர்ணாசிரம தர்மம் " தவறா?அனைத்து பிரிவுகளையும் நாம் நமது சுயநலத்தால் உருவாக்கினோம் .
அறிவில் சிறந்தவன் பிராமணன் . இதில் சைவம் அசைவம் என்றும் ,பிராமமனின் பிள்ளை பிராமணன் என்று எந்த தர்மமும் சொல்ல வில்லை .சத்ரியனின் பிள்ளை  வணிகனாக இருந்திருக்கலாம் .இது அனைத்து பிருவுகளுக்கும் பொருந்தும் .இந்த நாலு பிரிவில் நிச்சயமாக ஒரு பிரிவில் அனைவரும் அடங்குவர் .
உலக பொதுமறை என்று போற்ற படும் திருக்குறள் அதன் அதிகாரம் வகுக்க பட்டதும் பிரிக்க பட்டதும் இந்த தர்மத்தை பொறுத்தே .அனைவரையும் நேசிப்போம் .அன்பை பரப்புவோம் .மனிதனில் பிரிவினை என்ற ஒன்று இல்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் .There is no caste in this society. love everyone,treat everyone with humanity."for more information read varnachrama dharmam or watch "thirukural oru dharmam " in youtube.-
Yours
Pts Nathan

மேலும்

இக்காலத்துக்கு சாதி தேவை இல்லை. பாரதி கண்ட கனவு நிறைவேற்றுவோம் உலக அமைதி வேண்டுவோம் நன்றி 08-Mar-2016 5:11 am
வணக்கம் தங்கள் கருத்துக்கள் சிந்தனைக் களஞ்சியம் பாராட்டுக்கள் நன்றி 08-Mar-2016 4:05 am
கவிப்பிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2016 10:57 am

கொடியிடை
என் விரல் சூழ ,
குளிர்பனி
அவள் முகம் நாட,
கனி இதழ் முத்தம்-
கொஞ்சம் கொஞ்சியும்
கெஞ்சியும் கவிதையாய் அரங்கேற,
வான்பிறை ஒளியில்
அவள் நாணங்கள்
நடனங்கள் ஆட,
காவிரிக் கரைநீரில் காதல்
கலந்திங்கு ஓடியது.
அவள் கண்களின் சிறை சேர
மனம் கைதியாய் வாடியது;

மேலும்

மிகவும் நன்று 07-Mar-2016 10:21 pm
கவிப்பிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2016 7:05 pm

தன் உயிர் பாராது
என் உயிர் விதைத்தவளே
மீண்டும் உன்னுடன் நான் வாழ
ஒர் நாள் கேட்கின்றேன்;

கண்ணில் சிறைவைத்து
காதலை பொழிந்தவளே
உன்னுடள் போர்வையாய்
உன் இதழ் சுவை காண
ஓர் நொடி வேண்டுகிறேன்;

தஞ்சை தாய் மண்ணில்
தவறாக நுழைந்தவர்கள்
குருதியில் நீராட
பிண குவியலில் மதில் செய்ய
இன்னும் ஒர் நாள் வேண்டுகிறேன்;

உடல் பாய்ந்த அம்புகளும்
வாள் துளைத்தோடும் குருதியும்
போதாது போதாது என
நெஞ்சம் கொதிக்கிறது
இன்னும் ஓர் நாள்
இறுதியாய் வேண்டுகிறேன்;

இதோ சத்தமின்றி
எனை கைது செய்யும் காலனே
தஞ்சையில் நான் பிறக்க
ஓர் நாள் வேண்டுகிறேன்;

போய் வரவா
என் புகழ் சொன்ன ஊரே!
தமிழ்த்தாய் தினம் த

மேலும்

நான் வெண்பாவுக்கு பொருள் எழுதி சோழலின் காவியங்கள் சில படித்து இருக்கிறேன் அதை உங்கள் புதுக் கவிதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொண்டு வந்து சேர்க்கிறது 07-Mar-2016 12:46 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Jan-2014 7:09 pm

---------------------------------------------

வானவில்லை
படம் பிடித்து
மூளை மடிப்புக்களில்
பதியவைத்தேன்.

மூளை சும்மா இருக்குமா?
வண்ண வண்ணமாய்
நிறம் பிரித்து
தரம் பிரித்து
காதலியின் நினைவில்
கவிதை தா
என்கிறது ...

கற்பனையில் பாதி எழுதினேன்.
----------------------------
வானவில்லாய்
வலம் வந்தவள்
கானல் நீராய்
காணாமல் போனாள்
காணாமல் போனால்
கலங்காமல் இருப்பேனா ? .
நிறங்களை பிரித்து
காதல் அம்புகளாக
அவளிடம் அனுப்பவேண்டும்.
-----------------------------
நிறங்களை
ஏழு பிரித்து விட்டேன்
ஒவ்வொரு நிறத்திலும்
அம்பு செய்து
அன்பு தகவல்
அனுப்பிட வேண்டும்.

எப்படி

மேலும்

உதவி செய்பவரின் கவிதையே நல்லதென்று காதலன் பதவி கை மாறிடாமல் பார்த்துக் கொள்ளவேணும் சந்தோஷ். 01-Feb-2014 10:00 am
அழகு தோழா 30-Jan-2014 7:22 pm
எல்லாம் உங்களின் உற்சாக வார்த்தைகள் தான் காரணம் தோழி 30-Jan-2014 2:09 pm
ஆஹா ! மிக அருமை தோழா...!! எவ்வளவு ஆழ்ந்து சிந்திக்கின்றீர்கள் தோழா.. ! அருமை அருமை,.. தோழரே இந்த தளத்தில் நான் அனைவரும் நண்பர்களே..! வாருங்கள் ! தோழமையில் உங்களுடன் நட்பு பாராட்டு நானும் காத்திருக்கிறேன். 30-Jan-2014 2:08 pm
கார்த்திக் அளித்த படைப்பில் (public) Shriram Krishnan மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2014 6:19 pm

காதல்
அழகிய வார்த்தைகளின்
ஆரம்பம்

புரிந்தவனுக்கு
போதிமரம்
புரியாதவனுக்கு
போதை மரம்

கிளிஞ்சலின்
வயிற்றுக்குள் வசிக்கும்
புழு உமிழ்ந்த
சுண்ணாம்பு திரவத்தில்
பிறந்த முத்து
காதல்

இமயத்தை
ஜெயிக்க துணிவு
வேண்டுமா
முதலில்
ஒரு இதயத்தை
ஜெயித்து பழகு

அப்பாக்களுக்கு
பிடிக்காத வார்த்தை
அவர்களே
மகன்களாய்
இருந்த தருணம்
மிகவும் பிடித்த வார்த்தை
காதல்

காதலிக்கவில்லை
என்று சொல்பவன்
கூட
காதலித்து இருப்பான்
அவன் அகராதியில்
அதற்கு வேறு பெயர்

காதல்
மொழிக்கு முன்
வந்தது அல்ல
அமீபாவுக்கு
முன் வந்தது

காதல்
பூட்டிய வீட்டுக்குள்ளேயே
வரும்

மேலும்

அருமை.... 09-Dec-2014 10:42 am
நன்றி தோழமையே 13-Feb-2014 12:44 pm
தன் பெயரை எழுத தெரியாதவனுக்கும் தன் காதலி பெயரை எழுத கற்று தரும் காதல் காதலின் உச்சமாய் பார்க்கலாம் தோழரே இதை உள்ளூர சென்று உற்று நோக்கினால் புரியும் ஒருவன் தன்பெயரை எழுத பழகுகிறானோ இல்லயோ!! காதலியின் பெயர் எழுத முயற்சிக்கும் தருணம் எத்தனை ஆத்மார்த்தமானது உணர்வேன் தோழரே!! அருமை வரிகள் அனைத்தும் 13-Feb-2014 7:50 am
நன்றி தோழமையே 12-Feb-2014 12:03 pm
கவிப்பிரியன் - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 11:49 pm

பெண் என்பவள் யார் ?

மேலும்

பெண்கள் மானுட தேசத்தின் மங்காத சுடரொளிகள் ; மரணத்தின் காலடியில் ஜனனத்தை விதைப்பவர்கள் ; கனவுகளில் சிறகடிக்கும் சிறிது நேர சிறு வயது பட்டாம் பூச்சிகள்; இளமை எனும் நந்தவனத்தில் வாடும் வண்டிற்காக பூத்து குலுங்கும் மலர் கொத்துகள் ; வானுயர்ந்த கனவுகள் கண்களில் இருந்தும் நாணத்தில் தலைகவிழ்ந்து பூமியை மகிழ்விக்கும் புதுமை பெட்டகங்கள் ; கருமை கூந்தலில் தென்றலை குடிவைத்து எங்கும் மணம் வீசும் தோட்டத்து மல்லிகைகள் ; இரவின் இருளை விட இதயத்தில் இருள் கணத்து , சோக இருளின் போர்வையில் இல்லறம் நடத்தும் விடியலை தேடாத விட்டில் பூச்சிகள் ; மனச்சுமைகள் இருந்தாலும் மடிச்சுமைகள் தாங்கும் நேசமிகு சுமைதாங்கிகள் ; ஒரு கவிஞனின் பார்வையில் உயிருள்ள ஓவியம் எழுதபடாத காவியம் ; தோற்றத்திலும் முடிவிலும் உனக்காக அழுகின்ற அன்பின் மறுஉருவம் ; அவள் ஜனனத்தின் பிறப்பிடம் என்றுமே இறைவனின் இருப்பிடம் ; 26-Jan-2014 3:15 am
ஆணின் பாதி! 25-Jan-2014 6:35 pm
The king of the creater 25-Jan-2014 8:16 am
மனுஷி. 25-Jan-2014 7:57 am
கவிப்பிரியன் - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2014 10:56 pm

வறுமை என்பதன் அர்த்தம் என்ன?

மேலும்

எமாற்றுதனமும் ,போலித்தனமும் ,சுயநலவாதிகளின் அட்டூழியமும் இன்னும் உலகை விட்டு நீங்கவில்லை என்பதின் அடையாளம்தான் வறுமை ...... 26-Jan-2014 12:29 pm
சோம்பேறிகள் தேடிச்செல்லும் வாழ்க்கை ....... சுய நம்பிக்கை இல்லாதவர்கள் விரும்பும் வாழ்க்கை.. சமுதாயத்தை குறை சொல்லி சொல்லி வாழும் வாழ்க்கை.. அனைவரும் வாழப்பிறந்தவர்கள் அனைவரையும் ஒரே வழியில் தான் உருவாக்கினான் என்பதை புரிந்து கொள்ளாமல் வாழும் வாழ்க்கை ... வறுமை நம்பிக்கையும் , கேட்ட குணங்களும் , உழைத்து வாழமுடியும் என்பவர்களிடம் மற்றும் நல்லவர்களிடம் என்றும் இல்லாதது ... வறுமை ஒழிக்க ஒரே வழி அனைவருக்கும் கல்வி.... கல்வி இருந்தால் செல்வம் வந்து சேரும்.. கல்வி இருந்தால் சுய நம்பிக்கை வாழ்வில் தழைக்கும்.. ஒரு சிறிய கதை ... ஒரு கணவனை இழந்த பெண் 5 குழந்தைகளுடன் ஒரு முனிவருடன் அய்யா என் கணவர் இறந்த பின் என் குடும்பம் வறுமையில் வாடுகிறது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றாள் அப்போது முனிவர் " குழந்தைகளை எங்கே விட்டுவிடு நீ வேலைக்கு செல் சென்றார் " அப்போது அந்த பெண் அய்யா எனக்கு எங்கு வேலை தேட வேண்டும் என்றுகூட தெரியாது என்றாள் " அப்போது முனிவர் " புரிந்து கொண்டாயா உன் வறுமை உன்னை ஏன் வந்து சேர்ந்தது என்று ? அவள் புரியவில்லை என்றாள் அப்போது முனிவர் " கணவன் இருக்கும் போது அவன் கையை நம்பி வாழ்க்கையை துவங்கினாய் ஆனால் என்றாவது அவன் இல்லை என்றாள் நாம் என்ன செய்வோம் என்று யோசித்திருக்கிறாயா ? இப்படித்தான் பலர் மற்றவர்கள் கையை எதிர்பார்த்து வாழ்கிறார்கள் இதுவும் ஒரு வித சோம்பேறிகளை போல் தான் நீ உன் கணவர் இருக்கும் போதே இதை சிந்தித்திருந்தால் உன் வாழ்க்கை பயணம் உன் குழந்தைகளையும் சேர்த்து பாதிக்காது உன்னை மற்றவர்களிடம் கையேந்த விட்டிருக்காது என்றார் " ... சொல்ல வரும் கருத்து ஒன்று தான் ஒருவீட்டில் ஒருவர் உழைக்க மற்றவர்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசிக்காமல் இருப்பதும் ஒருவித சோம்பேறித்தனம் தான் ...அவர்களுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை அவர்கள் மற்றவர்கள் கையை எதிர்பார்க்கும் வரை அவர்களிடம் வறுமை இருக்கும்... 26-Jan-2014 6:25 am
உயிர் வாழத் தேவையான மூன்று அடிப்படை அம்சங்களான உணவு,உடை,இருப்பிடம் கூட கிடைக்கப்பெறாத நிலை.அப்படி கிடைக்காத உயிர்களிடத்தில் பரிவு காட்டாமையும் ' வறுமை'தான் என்பது என் கருத்து. 26-Jan-2014 2:58 am
அன்பை பகிர்ந்து கொள்ள கிடைக்காத உள்ளம் பிறரிடம் பெறாத மகிழ்ச்சி அன்னைமடி இல்லா உறக்கம் வறுமையே! 26-Jan-2014 2:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (60)

இவர் பின்தொடர்பவர்கள் (60)

user photo

வா. நேரு

சொந்த ஊர் : சாப்டூர், தற்போ
kailash

kailash

Tenkasi
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (60)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே