கிறிஸ்டல் மனோவா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிறிஸ்டல் மனோவா |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 30-Sep-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 1542 |
புள்ளி | : 229 |
இவை கவிதைகள் அல்ல ... என் இதயத்தின் இருமல்கள்.... - Designer
............அறியாமை....
💦💧💦💦💦💦💦💦
தாகத்துக்கு தண்ணீர்
யாகத்தால் கிடைக்கும் போது
மரம் வளர்த்து மழைகேட்டே
மடையர்களாய் வாழ்ந்து விட்டோம்...
☔☔☔☔☔☔☔☔
க.செல்வராசு....
வல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை
தெள்ளிய மனத்து அறிவு
வல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை
தெள்ளியம னத்த றிவு
நண்பா, நீ அதிர்ஷ்டசாலிடா.
@@@@
என்னடா சொல்லற?
@@@@@
திருணம் ஆகி ஒரே வருசத்தில உன் மனைவி அழகான பெண் குழந்தையப் பெத்துக் குடுத்தாங்களே. அதத்தான் நான் சொன்னேன்.
@@@@@
எனக்கும் முல்லைக்கும் ரொம்ப சந்தோசம்டா. எம் பொண்ணுக்கு 'யா'வில முடியற புதுமையான, யாரும் தன் குழந்தைக்கு வைக்காத இந்திப் பேரா ஒண்ணு சொல்லடா நண்பா. நானும் பெயர் ஆராய்ச்சி பெயர் விற்பனை மையத்தில விசாரிச்சேன். அந்த மாதிரி பேரு எதுவுமே இல்லைனு சொல்லிட்டாங்கடா.
@@@@@
நாம கிராமத்தில் பொறந்து வளர்ந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு உழவுத் தொழிலைச் செய்யறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்கூட பாக்க நமக்கு நேரமில்லை. நாம அதை விரும்பறதும்
பகுந்து உண்ணும் காக்கை காக்கைக்
கடிகடித் துண்பர் காதலர்.
சு ற்றிச் சுற்றித் தேடுகிறேன்
ம னசெங்கும் நீதான்...
தி ரும்பவே முடியவில்லை!
சு மையான சுகமாக
ம னசெல்லாம் வலிக்கிறது...
தி னமும் உன் நினைவுகள்!
சு ருதி சேரா ராகங்கள் - என்
ம னதிலுள்ள கானங்கள்...
தி ரும்பிப் பார்! சுருதி சேரும்!
சு ற்றிச் சுற்றித் தேடுகிறாய்
ம னசுக்குள் எட்டிப் பார்...
தி ரவமாய் உருகி உருகி
உனக்குள்ளே நான்!
**
சு ந்தரத் தமிழினில்
ம துரமாய் எழுதிடுவேன்...
தி த்திக்கும் என் வார்த்தைகள்!
வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!
இடையிடையே வீசுகிறாய்...
இளந்தென்றலாய்!
வசந்தகால நினைவுகள்-
குருவிக்கூடுகளாய் -
காற்றினால் அடிக்கப்பட்டும்,
கரையான்களால் அரிக்கப்பட்டும்!
இலைகளை இழந்தும்,
கிளைகளில் காயமேற்றும் -
வேர்களைப் பரப்பி
ஒற்றை மரமாய்க்
காத்திருக்கிறேன்...
இன்னொரு வசந்தத்திற்காய்!
வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!
05.03.2019
இன்றொரு பாடலை எழுதுகின்றேன்...
இது உனக்காக அல்ல,
எனக்கான பாடலும் அல்ல,
நமக்காகவும் எழுதவில்லை,
அறிமுகமில்லாத
அன்னியனுக்காகவும் இல்லை.
முகவரி தெரியாமல்
எழுதப்படும் பாடல் இது...
முதல் வரி இல்லாமல்
எழுதப்படும் பாடலும் இதுதான்!
இந்தப் பாடலிலே
பல்லவி இருக்காது-
சரணங்களும் இல்லை!
இந்தப்பாடலை இசைக்க
ராகங்கள் தேவையில்லை!
இந்தப்பாடலை
ராக தேவனாலும்
பாட முடியாது!
எத்தனையோ காற்றுக்கள்
இந்தப்பாடலைத் தடவிப் பார்த்தும்-
இதன் உருவத்தினை
உணர முடியவில்லை!
எத்தனையோ கண்கள்
இதை வாசித்தும்
இதைப் புரிந்து கொள்ளவில்லை!
இது-
சிந்தனைகளை ஒருங்கிணைத்து
எழுதப்பட்ட பாடல்
முன் தோன்றி
முழுதறிந்த
மூடனே!
முன் வினை ஈடேற
என் வினை நீ செய்தாய்...
இவ்வினைப் பலனனைத்தும்
எவ்விதம் ஈடு செய்வாய்?
இன்னொரு வேடம் தருவாயா?
கண்களை மூடிக் கொள்வாயா?
வேற்றிடந் தந்தாய்...
வித்தைகள் செய்தாய்!
சோதனை செய்தாய்...
சொத்தெல்லாம் கொய்தாய்!
வெற்றிடமும் கிடைக்கவில்லை
கற்றதுவும் ஊறவில்லை...
நீ நடத்தும் தெருக்கூத்தில்
நான் நடித்தேன்
நாள் முழுதும்...
பாராட்டும் பழிச்சொல்லும்
என்னைச் சேர்ந்தன!
வினைப் பயன் என்றாய்!
விதி செய்தோன் நீதானே!
முன் தோன்றி
முழுதுஞ் செய்த
மூடனே!
என் வினை ஈடேற
இங்ஙனம் நீ செய்தாய்...
உன் வினை விளைவனைத்தும்
எவ்
வால்பாறை என்றொரு சிலி - கட்டுரை- கவிஜி
****************************************************************
மனித கால் தடங்களே படாத இடங்களில் இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்..
அருவி கொட்டும்
அடிவானம் முட்டும்
ஆழங்கள் கிட்டும்
பெருமழை தட்டும்.....
இந்தியாவில் இரண்டே இடங்களில் இருக்கும் சிங்கவால் குரங்குகள் இருக்கும் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம். அந்தம் கொண்ட ஆதியில் ஆதி கொண்ட அந்தமும் இருப்பது போல.
40 கொண்டை ஊசி வளைவுகள்.....50 க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் தாண்டி மெல்ல ஊர
ஒரு பெண் ஒழுக்கமற்ற உடை அணிவது சரியா? தவறா?
ப்ரியமுள்ள என்னவளே!...
புயல்களின் சீற்றத்தால்
புண்ணாகிக் கிடந்த என் நெஞ்சை
புன்னகைச் சிதறல்களால்
பூக்கச் செய்தவளே!...
கண்களின் கதிர்வீச்சால்
மீண்டும் என்னைக் காயப்படுத்தாதே !
நிஜங்களை அல்ல-
நிழல்களையே உன்னிடம் யாசிக்கிறேன்...
உன்னைப் பற்றிய கனவுகளிலேயே
உன்னோடு வாழ்ந்து விடுவேன்.
உன் ஈர விழிகளின் புன்னகைகளால்
என் தாகங்களை தீர்த்துக் கொள்வேன்...
உனக்குள் நான் ஒளிந்திருப்பதும்
எனக்குள் நீ நிறைந்திருப்பதும்
சுகமான அனுபவங்கள்!
ராத்திரிக் கனவுகள்...
தினமும் உன் நினைவுகள்...
தேகங்கள் சிலிர்த்திடும்!
விழியிரண்டும் கனத்திடும்!
ரவிவர்மன் ஓவியமா?
திகட்டாத காவியமா?
தேன் துளிகள் தொட்ட பின்னும்
விரல்கள் கசக்கிறது!
ரவிக்கை என்ன நிறம்
திறந்தால் என்ன வரும்
தேடிடும் மனம் அது...
விழியில் கனவு வரும்!