சுமதி

சு ற்றிச் சுற்றித் தேடுகிறேன்
ம னசெங்கும் நீதான்...
தி ரும்பவே முடியவில்லை!

சு மையான சுகமாக
ம னசெல்லாம் வலிக்கிறது...
தி னமும் உன் நினைவுகள்!

சு ருதி சேரா ராகங்கள் - என்
ம னதிலுள்ள கானங்கள்...
தி ரும்பிப் பார்! சுருதி சேரும்!

சு ற்றிச் சுற்றித் தேடுகிறாய்
ம னசுக்குள் எட்டிப் பார்...
தி ரவமாய் உருகி உருகி

உனக்குள்ளே நான்!

**
சு ந்தரத் தமிழினில்
ம துரமாய் எழுதிடுவேன்...
தி த்திக்கும் என் வார்த்தைகள்!

எழுதியவர் : மனோ & மனோ (10-Feb-14, 11:55 am)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 293

மேலே