கண்ணுக்குத் தெரிகின்ற தென்றல்

தென்றல்
வெற்றிலையை மென்றது....

வயல்வெளியில்
விளைந்த நாற்றுக்கள்
அசைந்தபோது
அதை உணர்ந்தேன்.......

உயரத்தில் சென்ற தென்றல்
நாக்கை துருத்தி
சிவந்திருக்கிறதா என்று கேட்டது......

செவ்வானம் - சிவந்திருக்கிறது என்றேன்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Feb-14, 11:25 am)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே