அன்பு என்னடா
அன்பு என்னடா?
22 / 07 / 2025
அன்பு என்னடா? காதல் என்னடா?
அவசரமான உலகத்துல
ஆசை வார்த்தைக்கு அர்த்தம் என்னடா?
ஆடும் அந்த இளமையிலே
- அன்பு என்னடா?
சொன்ன வார்த்தையை நின்னு காக்கணும்
காதலின் ஆணி வேரடா
இறுதி வரையிலும் உறுதியாகனும்
கொண்ட காதலின் பேரடா
கொண்ட காதலின் பேரடா
- அன்பு என்னடா?
பார்த்த பொழுதிலே காதல் கொள்வதில்
அவசரம் இங்கு ஏனடா?
மோகத்தில் மலரும் பருவ பூக்களின்
உருவ மாற்றம் தானடா - வெறும்
உருவ மாற்றம் தானடா
இளமை தொடங்கியே முதுமை வரையிலும்
தொடர்ந்து வந்தால் தானடா
தெய்வ காதல் என்று உலகம்
போற்றிடும்
சரித்திரத்தின் உண்மையடா - இது
சரித்திரத்தின் உண்மையடா
-அன்பு என்னடா?
(பழைய பாடல் அண்ணன் என்னடா? தம்பி என்னடா?
பாட்டின் பாதிப்பில்...)