மரங்களில் வசிக்கும் பறவைகள்
மரங்களில் வசிக்கும் பறவைகள்
ஓங்கி வளர்ந்த
மரம் ஒன்று
ஓராயிரம் வளைவுகளும்
பொந்துகளுமாய்
ஒவ்வொரு பொந்திலும்
ஜோடியாய் அல்லது
இரு ஜோடிகளாய்
வட்ட வட்ட
கருவிழிகள்
உள்ளிருந்து
உருண்டு பிரண்டு
பார்க்கிறது
எங்கிருந்தோ வந்த
கூச்சல்..!
அத்தனை பொந்துகளில்
இருந்த கண்களும்
கீச்..கீச்…கீச்
சப்தமிட்டு வெளியே
வந்து
இறக்கை அடித்து
மரத்தை
சுற்றி பறந்தன.