சுகமான அனுபவங்கள்
ப்ரியமுள்ள என்னவளே!...
புயல்களின் சீற்றத்தால்
புண்ணாகிக் கிடந்த என் நெஞ்சை
புன்னகைச் சிதறல்களால்
பூக்கச் செய்தவளே!...
கண்களின் கதிர்வீச்சால்
மீண்டும் என்னைக் காயப்படுத்தாதே !
நிஜங்களை அல்ல-
நிழல்களையே உன்னிடம் யாசிக்கிறேன்...
உன்னைப் பற்றிய கனவுகளிலேயே
உன்னோடு வாழ்ந்து விடுவேன்.
உன் ஈர விழிகளின் புன்னகைகளால்
என் தாகங்களை தீர்த்துக் கொள்வேன்...
உனக்குள் நான் ஒளிந்திருப்பதும்
எனக்குள் நீ நிறைந்திருப்பதும்
சுகமான அனுபவங்கள்!