அமானுஷ்யா

நண்பா, நீ அதிர்ஷ்டசாலிடா.
@@@@
என்னடா சொல்லற?
@@@@@
திருணம் ஆகி ஒரே வருசத்தில உன் மனைவி அழகான பெண் குழந்தையப் பெத்துக் குடுத்தாங்களே. அதத்தான் நான் சொன்னேன்.
@@@@@
எனக்கும் முல்லைக்கும் ரொம்ப சந்தோசம்டா. எம் பொண்ணுக்கு 'யா'வில முடியற புதுமையான, யாரும் தன் குழந்தைக்கு வைக்காத இந்திப் பேரா ஒண்ணு சொல்லடா நண்பா. நானும் பெயர் ஆராய்ச்சி பெயர் விற்பனை மையத்தில விசாரிச்சேன். அந்த மாதிரி பேரு எதுவுமே இல்லைனு சொல்லிட்டாங்கடா.
@@@@@
நாம கிராமத்தில் பொறந்து வளர்ந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு உழவுத் தொழிலைச் செய்யறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்கூட பாக்க நமக்கு நேரமில்லை. நாம அதை விரும்பறதும் இல்லை. என்னோட பாட்டி வெறித்தனமா இந்தித் தொடர்களப் பாக்கறவங்க. அவுங்கிட்ட நீ கேட்ட மாதிரி பேராச் சொல்லச் சொல்லறேன். என்ன செய்யறது? நம்ம பட்டிக்காட்டுச் சனங்க யாருமே அவுங்க குழந்தைக்கு தமிழ்ப் பேரை வைக்கிறதில்லை. சரி நான் நாலு மணிக்கு பேரோட வர்றேன்.
@@@@@
சரிடா.
@#@##
(மாலை 4 .00 மணி)
வாடா நண்பா. பாட்டி என்ன சொன்னாங்க.
@##@@@
இப்பெல்லாம் சில தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்ல 'அமானுஷ்யம்'ங்கற வார்த்தையைச் சொல்லறாங்களாம். அதுக்கு அர்த்தம் தெரியாதாம். 'அமானுஷ்யா'ங்கற பேரை வைக்கச் சொல்லி பாட்டி சிபாரிசு பண்ணிருக்காங்க.
@####
'அமானுஷ்யா'. அருமையான பேருடா நண்பா. நாளைக்கு ஒரு கிலோ அம்மையார் கடை இனிப்போட வந்து பாட்டிக்கு நன்றி சொல்லப் போறேன்டா.
@@@@@
சரி. சரி. என் வேலை முடிஞ்சிருச்சு நான் காய்கறிச் செடிங்களுக்குத் தண்ணி பாய்ச்சப் போறேன்டா.
@@@@@
சரிடா. நானும் தோட்டத்துக்குப் போறேன்டா.

எழுதியவர் : மலர் (27-Jun-19, 9:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 125

மேலே