நீ வருவாய் என

வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!

இடையிடையே வீசுகிறாய்...
இளந்தென்றலாய்!

வசந்தகால நினைவுகள்-
குருவிக்கூடுகளாய் -
காற்றினால் அடிக்கப்பட்டும்,
கரையான்களால் அரிக்கப்பட்டும்!

இலைகளை இழந்தும்,
கிளைகளில் காயமேற்றும் -

வேர்களைப் பரப்பி
ஒற்றை மரமாய்க்
காத்திருக்கிறேன்...

இன்னொரு வசந்தத்திற்காய்!

வருகிறாய், போகிறாய்...
வசந்தம் போல்!

05.03.2019

எழுதியவர் : - மனோ (6-Mar-19, 9:41 am)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 70

மேலே